• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா தடுப்பூசி குலுக்கலில் பெண்ணுக்கு 7.4 கோடி பரிசு

கொரோனா தடுப்பூசி குலுக்கலில் பெண்ணுக்கு 7.4 கோடி பரிசு

 பெண்ணுக்கு 7.4 கோடி பரிசு

பெண்ணுக்கு 7.4 கோடி பரிசு

பல்வேறு நாடுகளில் அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி மேளா நடத்தப்பட்டு குலுக்கல் முறையில் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு குலுக்கலில் பெண் ஒருவருக்கு 7.4 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் பெரும் சோகத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுதியுள்ளது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபின்னர், கொரோனா வைரஸின் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்துவதை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு அலைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், 3வது அலை உருவாவதை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் வேகமாக அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்களிடையே தடுப்பூசி செலுத்தும் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி மேளா நடத்தப்பட்டு குலுக்கல் முறையில் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தமாதிரியான குலுக்கலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.



ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ’தி மில்லியன் டாலர் வேக்ஸ்’ என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு அதிகபட்சமாக 7.4 கோடி ரூபாய் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அரசு மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி மேளாவில் மக்கள் அலை அலையாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அனைவருடைய பெயரும் குலுக்கலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.



ஜோன் ஜூ என்ற பெண்ணும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசி மேளாவின் முடிவில் குலுக்கல் நடைப்பெற்றுள்ளது. அந்த குலுக்களில் ஜோன் ஜூவுக்கு 7.4 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இதனை தெரிவிப்பதற்காக அரசு அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டபோது, ஜோன்ஜூ போனை எடுக்கவில்லை. பின்னர், தகவல் தெரிந்து பரிசைப் பெற்றுக் கொண்டுள்ளார்.



மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த ஜோன் ஜூ, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், " இவ்வளவு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக எனக்கு 7.4 கோடி ரூபாய் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொகையை எதிர்காலத்துக்காக பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்ய உள்ளேன். மேலும், சீனாவுக்கு சுற்றுப் பயணம் செல்ல வேண்டும் என்பது பல ஆண்டு கனவு. அந்த நாட்டின் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டால், குடும்பத்தினருடன் அங்கு கண்டிப்பாக சுற்றுலா செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: