Home /News /international /

மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வரும் வினோத பெண்!

மரத்தை திருமணம் செய்து 3 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வரும் வினோத பெண்!

வினோத பெண்

வினோத பெண்

சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் காட்டை அழித்தல் போன்ற செயல்களுக்கு எதிராக இந்த முடிவினை அவர் எடுத்ததாக கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் தனது உறவு இன்னும் வலுவாக இருப்பதாக கூறி அனைவரையும் வியப்படைய செய்துள்ளார்.

37 வயதான கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மெர்சிசைடில் உள்ள செஃப்டனில் எல்டர் என்ற மரத்தை திருமணம் செய்த பிறகு தனது இரண்டாவது பெயரான குடும்பப் பெயரை எல்டர் என்று மாற்றிக்கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் அவர், வாரத்திற்கு ஐந்து முறை எல்டர் மரத்தை பார்த்துவிட்டு செல்வதாக கூறியுள்ளார். மேலும் அந்த நாட்டில் கொண்டாடப்படும் குத்துச்சண்டை தினத்தன்று தனது மரத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இதனை கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இவர் உண்மையில் ஒரு இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் ரிம்ரோஸ் பள்ளத்தாக்கு கன்ட்ரி பார்க் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரத்தை திருமணம் செய்து கொண்டார்.பல ஆண்டுகளுக்கு முன்பு மரங்களை திருமணம் செய்த மெக்சிகன் பெண்களால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த முடிவினை அவர் எடுத்தார். சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் காட்டை அழித்தல் போன்ற செயல்களுக்கு எதிராக இந்த முடிவினை அவர் எடுத்ததாக கூறினார்.

ALSO READ |  கடைசி உணவை ஆர்டர் செய்தவரின் உயிரை காப்பாற்றிய டெலிவரி நபர் - நெட்டிசன்கள் பாராட்டு!

ரிம்ரோஸ் பள்ளத்தாக்கு கன்ட்ரி பூங்காவிற்குச் சென்று தான் திருமணம் செய்யப்போகும் மரத்தை அவர் கண்டறிந்துள்ளார். அப்போது தான் எல்டர் மரத்தை பார்த்துள்ளார் அதன் வெளிர் பட்டை நிறமும் பெரிய அளவும் அவரை கவர்ந்தன.மேலும் அந்த மரம் தன்னை நிறைவு செய்கிறது என்று கூறியுள்ளார். உண்மையில், மரப்பட்டையால் மூடப்பட்ட காதலன் மீதான காதல் இருவரின் திருமணத்தில் சென்று முடிந்தது. மேலும் இந்த உறவு தனது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளது என்று கேட் கூறியுள்ளார். தற்போது இந்த ஜோடி இந்த ஆண்டு தங்களது மூன்றாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராக உள்ளனர். கேட் இந்த திருவிழாவிற்காக மரத்தை மாலை, டின்சல் மற்றும் பாபிள்களால் போன்றவற்றால் அலங்கரித்துள்ளார்.

ALSO READ |  கிரிப்டோகரன்சி கிளாஸ் எடுத்து யூடியூபில் மாதம் 15 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த நபர்

இதுகுறித்து டெய்லி மெயில் பத்திரிகைக்கு அவர் பேட்டியளித்ததாவது, "இப்போது எங்களின் மூன்றாவது கிறிஸ்மஸ் பண்டிகையை ஒன்றாக கொண்டாடவுள்ளோம். அதனால் அதற்கு அலங்காரங்களை செய்வதை பாரம்பரியமாக உணர்கிறேன். அலங்காரங்களை செய்ததால், பிரகாசமான டிசம்பர் வெயிலில் எனது மரம் என்னை எப்போதும் போல கவர்ந்தது. நான் ஹோலியில் இருந்து மாலையை உருவாக்கினேன்.மேலும் நான் பண்டிகை மினுமினுப்பை கொண்டுவர சிறிது ஸ்ப்ரே சேர்த்துள்ளேன்," என்று அவர் கூறினார். கேட் தனது கிறிஸ்துமஸ் அட்டைகளில் ‘With Winter Wishes, From Mr and Mrs Elder’ என எழுதி கையொப்பமிட்டு பிறருக்கு கொடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "மக்கள் இன்னும் கேள்விகளைக் கேட்கிறார்கள், திருமணமானது உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிவிட்டதா?" என்று காட்டாயம் ஆம் என்று கூறினேன்!

ALSO READ | கடலில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்: 12 மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த அமைச்சர்

இன்னும் சிலர் 'நீங்கள் மரத்தை விரும்புகிறீர்களா?' ஆம் நான் விரும்புகிறேன்!" திருமணத்திற்குப் பின்னால் உள்ள எனது உந்துதல்கள் குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. ' என்று கூறினார். அதேபோல, கேட்டின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரது திருமணத்தை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Nature lover, Tree plants, Woman

அடுத்த செய்தி