முகப்பு /செய்தி /உலகம் / புர்கா அணிந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..பாகிஸ்தானில் பகலில் நடந்த சம்பவம்!

புர்கா அணிந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்..பாகிஸ்தானில் பகலில் நடந்த சம்பவம்!

பெண்ணிடம் அத்துமீறும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள்.

பெண்ணிடம் அத்துமீறும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள்.

ஒரு பெண் தனியாகப் பகலில் கூட தெருவில் நடந்துபோக முடியவில்லை என்ற உண்மை இன்னும் இந்த சமுதாயத்தில் பெண்கள் நிலைமையைப் புலப்படுத்துகிறது என சமூக வலைதளங்களில் மக்கள் பேசி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பட்டப்பகலில் புர்கா அணிந்த பெண்ணிடம் ஆண் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் புர்கா அணிந்த பெண் தெருவில் நடந்து செல்லும்போது பின்னால் இருந்து அடையாளம் தெரியாத நபர் திடீரென பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுத் தப்பியோடிச் செல்வது பதிவாகியுள்ளது.

இந்த காணொளி வைரலாகி தற்போது இதனைக் கண்டித்து பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இணையத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு என்பது தற்போது பேசப்பட வேண்டிய தலைப்பாக மாறியுள்ளது. முன்பு பாகிஸ்தானில் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் வெளியே ஒரு பெண்ணை பலர் சேர்ந்து தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் காணொளி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல வருட காலங்களாகப் பெண்களின் பாதுகாப்புக்காகக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு பெண் தனியாகப் பகலில் கூட தெருவில் நடந்துபோக முடியவில்லை என்ற உண்மை இன்னும் இந்த சமுதாயத்தில் பெண்கள் நிலைமையைப் புலப்படுத்துகிறது என சமூக வலைதளங்களில் மக்கள் பேசி வருகின்றனர்.

பாலியல் ரீதியான தொந்தரவு அடிப்படையில் வெளியான அறிக்கையில் பாகிஸ்தானில் உள்ள 70 சதவீதத்துக்கு மேல் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த எண்ணிக்கை குறையாமலேயே இருக்கிறது.

பெண்கள் உரிமைக்காக வேலைசெய்யும் வைட் ரிப்பன் பாகிஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சேகரித்த தகவலின் படி 2004 ம் ஆண்டிலிருந்து 2016 ம் ஆண்டு வரை 4,734 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் பாகிஸ்தான் அரசு, பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு பாதுகாப்பு சட்டத்தை மேம்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sexual harassment, Sexually harrassed