பாம்புத் தோல் போன்ற லெக்கின்ஸ் அணிந்த மனைவி- உண்மைப் பாம்பு என அடித்து நொறுக்கிய கணவர்

இரவு நேரம் கழித்தே வீட்டுக்கு வந்த கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் காலுக்குக் கீழ் இரண்டு பாம்புகள் கிடப்பதாக எண்ணி மனைவியில் காலை கட்டையால் தாக்கியுள்ளார்.

Web Desk | news18
Updated: January 7, 2019, 11:16 PM IST
பாம்புத் தோல் போன்ற லெக்கின்ஸ் அணிந்த மனைவி- உண்மைப் பாம்பு என அடித்து நொறுக்கிய கணவர்
பாம்பு போன்ற உடை
Web Desk | news18
Updated: January 7, 2019, 11:16 PM IST
பாம்பு போன்றே தோற்றமளிக்கக்கூடிய லெக்கின்ஸ் அணிந்து கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கக் காத்திருந்த மனைவியை, தெரியாமல் உண்மைப் பாம்பு என மனைவியின் காலை அடித்து நொறுக்கியுள்ளார் கணவர்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னைச் சேர்ந்த பெண் ஒருவர் பாம்பு தோல் போன்றதொரு லெக்கின்ஸ் அணிந்துள்ளார். புதிதாக வாங்கிய லெக்கின்ஸை கணவரிடம் காட்டி சர்ப்ரைஸாக பயமுறுத்த எண்ணியுள்ளார் அந்த மனைவி.

ஆனால், அலுவலகம் சென்று வீடு திரும்ப வேண்டிய கணவர் வரத் தாமதமானதால் மனைவி உறங்கிவிட்டிருந்தார்.

இரவு நேரம் கழித்தே வீட்டுக்கு வந்த கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் காலுக்குக் கீழ் இரண்டு பாம்புகள் கிடப்பதாக எண்ணி மனைவியில் காலை கட்டையால் தாக்கியுள்ளார்.

அலறி எழுந்த மனைவி பாம்பைக் கண்டு தான் அலறுவதாக எண்ணி விடாமல் அடித்துள்ளார். அதன் பின்னர் அந்தக் களேபறத்தில் தன் கால் தான் என மனைவி காட்டியவுடன் அதிர்ந்த கணவர் மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடுமையாகத் தாக்கப்பட்டு அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Loading...
மேலும் பார்க்க: ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் தினகரன் குடும்பத்தினர் தான்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
First published: January 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...