Home /News /international /

பழைய ஆம்புலன்ஸ்களை வீடுகளாக மாற்றி லட்சங்களில் வருமானம் ஈட்டும் பெண்!

பழைய ஆம்புலன்ஸ்களை வீடுகளாக மாற்றி லட்சங்களில் வருமானம் ஈட்டும் பெண்!

Camper Vans

Camper Vans

சமந்தா தனது முதல் ஆம்புலன்ஸை 2012 இல் லண்டனில் வாங்கினார். பின்னர் அதை அவர் கேம்பர்வேன்களாக தயார் செய்து, தன் முத்திரையுடன் விற்றார்.

உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒரு நாள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். இதற்காக ஒருவர் தங்கள் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபடுவர். அந்த வகையில் தனி வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் சிலருக்கு ஒரு சிறிய தனித்துவமான நகரும் வீட்டை குறைவான விலைக்கு ஒரு இங்கிலாந்து பெண் அமைத்து கொடுக்கிறார்.

தனக்கு இருக்கும் கடனை அடைக்க தனது தனித்துவமான திறமையை பல லட்சம் காசாக மாற்றியுள்ளார். சமந்தா பாண்ட் என்ற அந்த பெண்மணி இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் வசித்து வருகிறார். இவர் பழைய ஆம்புலன்ஸ்களை வீடுகளாக மாற்றி விற்று வருகிறார். மேலும் இந்தத் திறமையின் உதவியால் ஒரு பெரிய கடனை அவரால் அடைக்க முடிந்தது.

அவர் முதன் முதலில் தனது வேலையை செய்ய தொடங்கியபோது, ​​அவருக்கு 30,000 பவுண்டுகள் அதாவது சுமார் ரூ. 30 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழைய ஆம்புலன்ஸ்களை வேலை செய்து அவற்றை கேம்பர்வேன்களாக மாற்றிய பிறகு சமந்தாவால் தனது கடனை அடைக்க முடிந்தது. அறிக்கைகளின்படி, தற்போது ஐரோப்பா முழுவதும் தனது பணியை சமந்தா செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் பழைய மற்றும் பயனற்ற ஆம்புலன்ஸ்களை அழகான கேம்பர்வேன்களாக மாற்றுகிறார்.

தனி வீடு போன்ற வசதி கொண்ட இந்த கேம்பர்வேன்களை சுமார் £15000-18000 யூரோ டாலர்களுக்கு விற்று வருகிறார். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.16 முதல் 19 லட்சத்திற்கு விற்று வருகிறார். இந்த வேன்களை உருவாக்க அவர் வழக்கமாக பழைய பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார். இதற்குக் காரணம் ஒவ்வொரு கேம்பர்வேனும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பது அவரது யோசனை.

Camper van


சமந்தா தனது முதல் ஆம்புலன்ஸை 2012 இல் லண்டனில் வாங்கினார். பின்னர் அதை அவர் கேம்பர்வேன்களாக தயார் செய்து, தன் முத்திரையுடன் விற்றார். இருப்பினும், இது தனது வணிகத் தொழிலாக மாறும் என்று சமந்தா ஒருபோதும் எண்ணியதில்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர், அந்த வேலையை பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்துள்ளார். அதன் மூலம் அவருக்கு கை மேல் பணம் குவிந்தது. ஒரு கேம்பர்வேனை உருவாக்க அவருக்கு 6 மாதங்கள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு முதல், சமந்தா சுமார் எட்டு ஆம்புலன்ஸ்களை வாங்கியுள்ளார். அவற்றில் ஐந்து வேன்களை மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், மீதமுள்ள ​​​மூன்று ஆம்புலன்ஸ்கள் கேம்பர்வான்களாக மாற்றப்பட்டிருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவின் ஆக்கப்பூர்வமான பணியை கண்டு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அவர் தனது பட்டறையில் பல மணிநேரங்கள் செலவிடுவதையும் இந்த கேம்பர்வேன்களை தயாரிப்பதையும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனது பணி தனது வாழ்க்கையை மாற்றியுள்ளதாகவும், இதனை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: UK, Woman

அடுத்த செய்தி