ஆம்ஸ்ட்ராங் கொடுத்த நிலா துகளை நாசா அபகரிக்க முயற்சி - பெண் பரபரப்பு புகார்

news18
Updated: June 13, 2018, 5:56 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொடுத்த நிலா துகளை நாசா அபகரிக்க முயற்சி - பெண் பரபரப்பு புகார்
நிலவின் மேற்புரம்
news18
Updated: June 13, 2018, 5:56 PM IST
நிலாவில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனக்கு பரிசாக கொடுத்த நிலாவின் துகளை நாசா அபகரிக்க முயற்சிப்பதாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நிலாவில் முதன்முதலாக அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் கால் பதித்தார்.

அமெரிக்காவின் சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா என்ற பெண் நியூயார்க் நீதிமன்றத்தில் நாசாவிற்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தார். அதில் தனது தந்தை டாம் முரே நீல் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராணுவ அதிகாரியாக இருந்த அவர் ஆம்ஸ்ட்ராங் உடன் பெரும்பாலான நேரத்தை செலவழித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.  அப்போது 1970-ல் தனக்கு 10 வயதாக இருந்தபோது ஆம்ஸ்ட்ராங்கே கைப்பட எழுதிய ஒரு குறிப்புடன் நிலாவின் துகள்களை பரிசாக கொடுத்தாக லாரா கூறுகிறார்.

மேலும், அத்துகள்களை தனது ஆராய்ச்சிக்காக நாசா பறித்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாசா எப்போதும் நிலா சம்பந்தமான அல்லது விண்வெளி சம்பந்தமான பொருட்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அபகரிப்பது போல, லாராவிடமிருந்தும்  நிலாவின் துகள்களை அபகரிக்க முயற்சிப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...