ஹோம் /நியூஸ் /உலகம் /

காதலனின் தொலைப்பேசியை வேறு பெண் எடுத்ததால் ஆத்திரம்.. வீட்டை தீவைத்து கொளுத்திய காதலி

காதலனின் தொலைப்பேசியை வேறு பெண் எடுத்ததால் ஆத்திரம்.. வீட்டை தீவைத்து கொளுத்திய காதலி

காதலன் வீட்டிற்கு தீவைத்த காதலி

காதலன் வீட்டிற்கு தீவைத்த காதலி

சம்பவத்திற்கு பின்னர் தொலைப்பேசி வாயிலாக காதலனை அழைத்த சோடோ 'உன் வீடு பத்திரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு காலை துண்டித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaTexasTexas

  தனது காதலன் போனில் வேறு ஒரு பெண் எடுத்து பேசிய ஆத்திரத்தில் அந்த காதலனின் வீட்டிற்கு தீவைத்த காதலி கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் 23 வயது பெண் செனைடா மேரி சோடோ. இவரும் அந்த மாகாணத்தின் சான் ஆண்டனியோ பகுதியில் வசிக்கும் ஆண் ஒருவரும் காதல் உறவில் இருந்துள்ளனர்.

  இந்நிலையில், கடந்த நவம்பர் 19ஆம் தேதி அன்று காதலி சோடோ தனது காதலனுக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை காதலனுக்கு பதிலாக வேறு ஒரு பெண் எடுத்து பேசியுள்ளார். இது காதலி சோடோவுக்கு சந்தேகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  தனது கோபத்தை பொறுத்துக்கொள்ள முடியாத காதலி நள்ளிரவு 1.45 மணிக்கு காதலன் வீட்டிற்குள் புகுந்து வீட்டின் மெத்தை, சோபா இருக்கும் இடத்தில் தீவைத்து கொளுத்தியுள்ளார். அத்துடன் வீட்டில் இருந்த சில பொருள்களையும் திருடிவிட்டு வெளியேறியுள்ளார். அத்தோடு நிற்காமல் தொலைப்பேசி வாயிலாக காதலனை அழைத்த சோடோ, 'உன் வீடு பத்திரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டார்.

  இதையும் படிங்க: வேடிக்கை பார்க்க அழைப்பு.. பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய தாலிபான்

  தனது காதலியின் செயலால் அதிர்ச்சி அடைந்த காதலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காதலி சோடோவை காவல்துறை கைது செய்துள்ளது. சோடோ நடத்திய தாக்குதலில் அவரது காதலன் வீட்டில் சுமார் 50,000 டாலர் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது. மேலும், அந்த அழைப்பை எடுத்தவர் காதலனின் உறவுக்காரப் பெண் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. ஒரு போன்கால்லுக்காக காதலி வீட்டையே கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Fire, USA