முகப்பு /செய்தி /உலகம் / வேறு பெண்ணுடன் தொடர்பு... காதலனை பழிவாங்க முழு பக்க விளம்பரம் தந்த பெண்

வேறு பெண்ணுடன் தொடர்பு... காதலனை பழிவாங்க முழு பக்க விளம்பரம் தந்த பெண்

முன்னாள் காதலனை பழிவாங்க முழு பக்க விளம்பரம் தந்த பெண்

முன்னாள் காதலனை பழிவாங்க முழு பக்க விளம்பரம் தந்த பெண்

தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனை விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பெண் ஒருவர் செய்திதாளில் முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தன்னை ஏமாற்றியவரைப் பழிக்குப் பழி வாங்கி அதன் மூலம் மன ஆறுதல் அடைவது பலருக்கு விருப்பமான ஒன்று. ஆஸ்திரேலியாவில் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க ஒரு பெண் சாமார்த்தியமாகவும் நூதனமாகவும் ஒரு டெக்னிக்கை கையாண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி. இவர் அந்நாட்டில் வெளியாகும் மெக்கே அன்ட் விட்சன்டே லைப் (Mackay and Whitsunday Life) என்ற செய்தித்தாளில் ஆகஸ்ட் 12ஆம் தேதி கொடுத்த ஒரு முழு பக்க விளம்பரம் தான் உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இவர் தனது காதலனை  விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். இவருடன் உறவில் இருந்த நபர் தற்போது வேறு பெண்ணுடன் உறவில் உள்ளதாக கூறப்படுகிறது. அதை விமர்சித்து பழி தீர்க்கும் விதமாகவே இந்த விளம்பரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தித்தாளின் நான்காம் பக்கத்தில் அந்த பெண் அளித்த விளம்பரத்தில், "டியர் ஸ்டீவ், நீ அவளுடன் சந்தோஷமாக இருப்பாய் என நினைக்கிறேன். இப்போது இந்த முழு நகரமே  நீ எவ்வளவு மோசமான ஏமாற்றுக்காரன் என்ற உண்மை அறிந்து கொள்ளும். இப்படிக்கு ஜென்னி. பின்குறிப்பு, இந்த விளம்பரத்தை உனது கிரெடிட் கார்டை பயன்படுத்தித் தான் வெளியிட்டுள்ளேன்". இவ்வாறு ஜென்னி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போலீசாரிடம் சிக்காமல் இருக்க கரடி பொம்மைக்குள் ஒளிந்து கொண்ட திருடன்.. அடுத்து நடந்தது?

தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் காதலன் அவரின் கிரெட் கார்டு பணத்தை வைத்தே பழிவாங்கியுள்ளார் ஜென்னி.

இந்த செய்தித்தாள், விளம்பரம் வெளியானதில் இருந்து உள்ளூர் மட்டுமல்லாது சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி யார் இந்த ஜென்னி என விளம்பரத்தை வெளியிட்ட நபரின் பின்புலத்தை மக்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த பெண்ணுக்கு சமூக வலைத்தளத்தில் லைக்குகள், கமெண்டுகள் என பயங்கரமான வரவேற்பு குவிந்து வருகின்றது. இதுவரை அந்த பேஸ்புக் போஸ்டுக்கு 6,500க்கும் மேற்பட்ட லைக்குகளும், 2,000க்கும் அதிகமான ஷேர்களும், 3,000க்கும் அதிகமான கமெண்டுகளும் கிடைத்துள்ளது.

First published:

Tags: Advertisement, Australia, Ex boyfriend, Ex girlfriend, Newspaper Stories