Home /News /international /

போரால் மக்கள் அகதிகளாக வெளியேறும்போது பியானோ வாசித்து ஆறுதல் அளித்த பெண் - நெகிழ்ச்சி வீடியோ

போரால் மக்கள் அகதிகளாக வெளியேறும்போது பியானோ வாசித்து ஆறுதல் அளித்த பெண் - நெகிழ்ச்சி வீடியோ

பியானோ வாசிக்கும் பெண்

பியானோ வாசிக்கும் பெண்

உக்ரைனின் லிவிவ் நகரின் ரயில் நிலையத்துக்கு வெளியே பியானா வாசித்து ஒரு பெண் ஆறுதல் அளித்தார்.

    ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்பில் பல நகரங்களை பறிகொடுத்துள்ளது உக்ரைன். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 11 நாட்கள் ஆகிவிட்டன. இந்நிலையில், பொதுமக்களும், வெளிநாட்டவர்களும் பத்திரமாக வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக தற்காலிகமாக போரை ரஷியா நிறுத்தியுள்ளது. அதே சமயம், நிரந்தர தீர்வு காணும் வகையில் ரஷ்யா - உக்ரைன் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு பக்கம், ரஷ்ய படைகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களால் மிரண்டு போயுள்ள பொதுமக்கள், கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

    உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பெரும் இருளுக்கு மத்தியில் சிறு ஒளி தெரிவதைப் போல, எந்தவித சலனமும் இல்லாமல், அமைதியான முக பாவத்துடன் பியானோ வாசித்துக் கொண்டிருந்தார் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற பெண். அவர் வாசித்த பியானோ இசை, அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் அளிப்பதை போலவே இருந்தது.

    இந்த வீடியோவை டிவிட்டரில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஆண்ட்ரீவ் ஆர்சி மார்ஷல் என்பவர் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “லிவிவ் ரயில் நிலையத்துக்கு வெளியே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வெளியேறுவதற்காக அகதிகள் குழுமியுள்ளனர். இத்தகைய சூழலில், இந்தப் பெண் பியானோ வாசிக்கிறார். என்ன ஒரு அழகான உலகம்! பியானோ இசை அவ்வளவு அழகாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார். வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


    இந்த வீடியோவை சுமார் 3 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். ஏராளமான டிவிட்டர் பயனாளர்கள் இதை பாராட்டியும், வெகுசிலர் இதை விமர்சித்தும் எழுதி வருகின்றனர். டைட்டானிக் படத்தில் காட்சிகளுடன் பலர் இதை ஒப்பீடு செய்துள்ளனர். இன்னும் சிலர், ‘தி பியானிஸ்ட்’ என்ற படத்துடன் இந்த நிகழ்வை ஒப்பிட்டனர். டிவிட்டர் யூஸர் ஒருவர் வெளியிட்ட கமெண்டில், “இது வேடிக்கை அல்ல. ஒரு வாரத்திற்கும் மேலாக மிக பயங்கரமான போர் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு இதுபோன்ற சின்ன விஷயங்கள் ஆறுதலாக அமைந்துள்ளது. கண்களில் கண்ணீர் வழிகிறது’’ என்று கூறியுள்ளார். இதேபோன்று எண்ணற்ற யூஸர்கள் அழுவது போன்ற எமோஜிகளை பதிவிட்டுள்ளனர்.

    'உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேசுங்கள்' : ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

    இதற்கிடையே, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எண்ணத்தில், கிவிவ் நகரில் உள்ள அனைத்து புராதான சின்னங்களும் மூடி வைக்கப்பட்டுள்ளன. ரினோக் ஸ்கொயர் பகுதியில் உள்ள 4 சிலைகள் மற்றும் கடலில் பாதுகாவலராகக் கருதப்படும் ‘ஸ்டேட்சூ ஆப் நெப்டியூன்’ சிலை ஆகியவை மூடப்பட்டுள்ளன.
    Published by:Karthick S
    First published:

    Tags: Russia - Ukraine

    அடுத்த செய்தி