10 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு பிறந்த குழந்தை: அமெரிக்காவில் அதிர்ச்சி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஒருவர் கோமாவில் இருந்து வருகிறார். அவருக்கு கடந்த டிசம்பர் 29-ம் தேதி குழந்தை பிறந்தது.

news18
Updated: January 6, 2019, 3:43 PM IST
10 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு பிறந்த குழந்தை: அமெரிக்காவில் அதிர்ச்சி
மாதிரிப் படம்
news18
Updated: January 6, 2019, 3:43 PM IST
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் ஃபீனிக்ஸ் நகரிலுள்ளது ஹாசியேண்டா என்ற தனியார் மருத்துவமனை. விபத்தில் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஒருவர் இந்த மருத்துவமனையில் கோமாவில் இருந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு கடந்த டிசம்பர் 29-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. கோமாவில் இருக்கும் அவர் கர்ப்பமாக இருப்பது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யாருக்கும் தெரியாது. இந்நிலையில், டிசம்பர் 29-ம் தேதி கோமாவில் இருந்த பெண் முணுமுணுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த அறைக்கு வந்த செவிலியர் ஒருவர்,  அப்பெண்ணை பார்த்தபோது, பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து குழந்தை வெளியேற முயற்சி செய்துள்ளது. பின்னர், மருத்துவர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், ‘மருத்துவமனையிலுள்ள ஆண் ஊழியர்களுக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: January 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...