Home /News /international /

போதைப்பொருள் கடத்தலில் போலீசாரை கிறுகிறுக்க வைத்த பெண்.. கார் சேஸிங் செய்த காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

போதைப்பொருள் கடத்தலில் போலீசாரை கிறுகிறுக்க வைத்த பெண்.. கார் சேஸிங் செய்த காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கார் சேஸிங் செய்த காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கார் சேஸிங் செய்த காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடத்தி வந்த போதைப்பொருளை, உடலின் பெயர் குறிப்பிட முடியாத இடத்தில் வைத்து மறைத்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த காவல்துறையினர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ஜார்ஜியாவில் பெண் ஒருவர் உடலின் குறிப்பிடமுடியாத இடத்தில் போதைப்பொருளை மறைத்து கடத்தியது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஜார்ஜியா காவல்துறையினருக்கு ஒரு நிசான் செடான் கார் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், திருடப்பட்ட நிசான் காரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். டிராக்கிங் மூலம் கார் இருக்கும் இடத்தை அறிந்த காவல்துறையினர், அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, காருக்குள் இருந்த விட்னி பெய்லி (வயது 23) என்ற பெண்ணும், பிரைன் டர்னர் (வயது 22) என்ற இளைஞரும் காவல்துறையினர் தங்களை பிடிக்க முயற்சி செய்வதறை அறிந்து மின்னல் வேகத்தில் காரை ஓட்டியுள்ளனர்.

காரை ஓட்டிய விட்னி பெய்லி, சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஜார்ஜியா நகரப்பகுதியில் பறந்துள்ளார். காவல்துறையினரும் விடாமல் அவர்களை துரத்தினர். கார் சேஸிங்கிற்கு பிறகு அவர்களை ஒருவழியாக மடக்கிப் பிடித்த காவல்துறையினருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இருவரும் போதைப்பொருளைக் கடத்துவதற்காக காரை திருடிச் சென்றது தெரியவந்தது. தாங்கள் கடத்திய போதைப்பொருளை மறைப்பதற்காக அவர்கள் எடுத்த விபரீதமான முயற்சி அதிகாரிகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடத்தல்காரர்கள்


 

பிரைன் டர்னர் (Brian Turner), ஒரு பை அளவிலான போதைப்பொருளை சாப்பிட்டும், தனது உடமைக்குள் மறைக்கவும் முயன்றுள்ளார். இது வாடிக்கையான விஷயம் என்றாலும், விட்னி பெய்லியின் (Whitney Bailey) செயல் காவல்துறையினரை கிறுகிறுக்க வைத்துள்ளது. தான் கடத்தி வந்த போதைப்பொருளை, உடலின் பெயர் குறிப்பிட முடியாத இடத்தில் வைத்து மறைத்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த காவல்துறையினர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

காவல்துறையினர் விட்னி பெய்லி மற்றும் பிரைன் டர்னரை (Brian Turner) பிடிக்க, காவல்துறையினர் மேற்கொண்ட கார் சேஸிங் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், விட்னி பெய்லி சுமார் 80 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் நகரப்பகுதிகளில் காரை இயக்கியுள்ளார். காவல்துறையினர் சளைக்காமல் அவர்களை சேஸிங் செய்து பிடிக்க முயன்றுள்ளனர்.

ஒருவழியாக, அவர்களின் காரை காவல்துறையினர் மறித்து, இருவரையும் கைது செய்ததுள்ளது, அதில் பதிவாகியுள்ளது. இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜார்ஜியா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, காரை அதிவேகமாக இயக்கிய விட்னி பெய்லி (Whitney Bailey) மீது காரை அதிவேகமாக இயக்குதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக போதைப்பொருளைக் கடத்துதல், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரைன் டர்னர் மீது போதைப்பொருள் கடத்துதல், சட்டவிரோதமாக செயலில் ஈடுபடுதல், சமூகவிரோத செயலுக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிவந்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: Marijuana

அடுத்த செய்தி