Home /News /international /

வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்

வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

டிவின்ஸ் என்று சொல்லப்படும் இரட்டை குழந்தைகளை கருத்தரிப்பது அரிது தான். முதலாவதாக பிறக்கும் குழந்தை இரண்டாவதாக கருவில் உண்டாகி இருக்கும்.

உலகம் முழுவதிலும் வழக்கமாக ஏற்படும் ஒரு சில நிகழ்வுகள், சில நேரங்களில் ஆச்சரியமானதாக, அரிதான நிகழ்வாக மாறும். இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான ஒன்றுதான். ஆனாலும், பல நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் இரட்டையர்கள் உள்ளனர். இரட்டை குழந்தை பிறப்பு இப்போது அதிசயமாக பார்க்கப்படவில்லை என்றாலும், சமீபத்தில் அதிசயப்படும் வகையில் இரட்டை குழந்தைகள் வெவ்வேறு ஆண்டுகளில் ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார்.

டிவின்ஸ் என்று சொல்லப்படும் இரட்டை குழந்தைகளை கருத்தரிப்பது அரிது தான். முதலாவதாக பிறக்கும் குழந்தை இரண்டாவது கருவில் உண்டாகி இருக்கும். அதனால் இரண்டாவதாக பிறக்கும் குழந்தைதான் மூத்த குழந்தை என்று இரட்டை குழந்தைகளில் பல்வேறு வேடிக்கையான கருத்துக்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்பொழுது அமெரிக்காவில் ஃபாத்திமா மட்ரிகள் என்ற பெண்மணி வித்தியாசமாக, இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டைக் குழந்தையைப் பெற்ற செய்தி வெளியாகியுள்ளது.

2021 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு, தன்னுடைய மகன் ஆல்ஃபிரடோவைப் பெற்றார். அடுத்த குழந்தை சில நிமிடங்களில் பிறந்து விடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரு சில நிமிடங்களிலேயே இரண்டாவது குழந்தையும் பெற்றிருக்க வேண்டிய நேரத்தில், அவருடைய மற்றொரு குழந்தை ஐலின் 2022 ஆம் ஆண்டு பிறந்தது. அதாவது இரட்டையரில் மகன் 2021 ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியிலும், பெண் 2022 ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலும் பிறந்துள்ளனர்.

ALSO READ |  அன்னை தெரசா அறக்கட்டளை உரிமத்தை புதுப்பித்த மத்திய அரசு...!

இரட்டை குழந்தைகளுக்கு தோற்றம் முதல் பழக்க வழக்கம் வரை எல்லாமே ஒரே மாதிரி இருக்கும் போது, அவர்களுடைய பிறந்த நாளும் ஒன்றாகத்தான் கொண்டாடப்படும். ஆனால் இந்த விஷயத்தில் பிறந்த நாள் மட்டுமல்ல, பிறந்த ஆண்டே வெவ்வேறாக இருக்கிறது.



இருவரும் வெவ்வேறு பிறந்தநாளை கொண்டிருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி என் குழந்தை நள்ளிரவில் பிறந்தது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று ஃபாத்திமா தெரிவித்துள்ளார்.



டிவின்ஸ் என்றாலும், வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த குழந்தை என்பது மருத்துவமனை முழுவதும் மகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு, ‘கோடியில் ஒரு குழந்தை’ பலரும் குழந்தைகளோடு புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பாத்திமாவின் பெண்ணான ஐலின் தான், அந்த மருத்துவமனையில் 2022ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை என்றும் மருத்துவமனை கொண்டாடி வருகிறது.

ALSO READ |  காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு காரணமாக  போக்குவரத்து சேவை கடும் பாதிப்பு...!

இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த ஃபாத்திமாவின் குடும்ப மருத்துவரும், தான் பார்த்த பிரவசங்களில் மிக மிக அரிதானது என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன என்று மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் வெவ்வேறு நாட்களில் இரட்டை குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Twins, Woman

அடுத்த செய்தி