கொரோனா நோயை எதிர்க்கும் ஆன்டிபாடிகளுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

கொரோனா நோயை எதிர்க்கும் ஆன்டிபாடிகளுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

கோப்புப் படம்

கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கொண்ட குழந்தையைப் பெற்றெடுத்த அமெரிக்க தாய்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொடிய நாவல் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கொண்ட குழந்தையைப் பெற்றெடுத்த அமெரிக்க தாய், தனது கர்ப்ப காலத்தில் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெண் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சுகாதார பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ பிரிண்ட் சர்வர் medRxiv-இல் வெளியிடப்பட்ட, இன்னும் சமர்ப்பிக்கப்படாத இந்த ஆய்வில், Moderna mRNA தடுப்பூசியின் ஒரு டோஸை, குழந்தையின் தாய் 36 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் கர்ப்பத்தின் போது போட்டுகொண்டுள்ளார். இதையடுத்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த உடனேயே அதனிடம் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரியில் SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதை வெளிப்படுத்தியதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தையில் இயற்கையாகவே ஆன்டிபாடி உருவாகியிருப்பதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு தாயிடம் உருவான எதிர்ப்பு சக்தி நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து குழந்தைக்கு கிடைத்திருக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவின் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை ஆசிரியர்களான பால் கில்பர்ட் மற்றும் சாட் ருட்னிக் ஆகியோர் தெரிவித்தாவது, " தாய்வழி தடுப்பூசிக்குப் பிறகு, தண்டு ரத்தத்தில் கண்டறியக்கூடிய SARS-CoV-2 IgG ஆன்டிபாடிகளை கொண்ட குழந்தையின் முதல் அறியப்பட்ட வழக்கை இங்கே நாங்கள் உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Also read... அதிக நேரம் சோசியல் மீடியாவில் மூழ்கும் நபர்களுக்கு பற்களை கடித்தல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வரலாம் - ஆய்வில் தகவல்!

எங்களுக்கு தெரிந்தவரை, உலகிலேயே தடுப்பூசிக்குப் பிறகு ஆன்டிபாடிகளுடன் ஒரு குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை" என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது, குழந்தைக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கும் அந்தப் பெண், சாதாரண 28 நாள் தடுப்பூசி நெறிமுறை காலவரிசைப்படி தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "புதிதாகப் பிறந்த குழந்தையில் இந்த ஆன்டிபாடிகளின் பாதுகாப்பு செயல்திறன் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது சரியாக தெரியவில்லை என்று குழந்தை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குறித்த பதிவேடுகளை உருவாக்கவும், COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரிடையே உள்ள நோய் எதிர்ப்பு செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் மற்ற புலனாய்வாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: