முகப்பு /செய்தி /உலகம் / WATCH - சிரியா நிலநடுக்கம்.. இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தை.. உயிருடன் மீட்டுக்கொண்டு ஓடி வந்த நபர்!

WATCH - சிரியா நிலநடுக்கம்.. இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தை.. உயிருடன் மீட்டுக்கொண்டு ஓடி வந்த நபர்!

சிரியா

சிரியா

கட்டிட இடிபாடுகளை இடையே இருந்து ஒருவர் புதிதாகப் பிறந்த குழந்தையை  தூக்கிக்கொண்டு வெளியே ஓடுவதைக் காண முடிகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிரியாவில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். இடிபாடுகளில் இருந்து குழந்தை மீட்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி 6- திங்கள்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில்  7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் உள்ள காசியான்டெப்பை மையமாக கொண்ட முதல் நில அதிர்வு  உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணியளவில் உணரப்பட்டது. அடுத்தடுத்து கஹ்ரமன்மாராஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்  ஏற்பட்டது. இதனால் பல கட்டிடங்கள் சரிந்தது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5000 க்கும் மேற்பட்டர் இறந்துள்ளனர். அப்படி சிரியாவின் அஃப்ரின் என்ற இடத்தில் உள்ள கட்டிட இடிபாடு மீட்பு பணி . அப்போது இடிபாடுகளை இடையே சிக்கிய சிரிய பெண் கட்டிட  இடிபாடுகளுக்கு இடையிலேயே  பெற்று எடுத்துள்ளார். அந்த குழந்தையை ஒருவர் மீட்ட காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

சிறிய வீடியோவில், கட்டிட இடிபாடுகளை இடையே இருந்து ஒருவர் புதிதாகப் பிறந்த குழந்தையை  தூக்கிக்கொண்டு வெளியே ஓடுவதைக் காண முடிகிறது. கட்டிட அமைப்புகளில் இருந்து  குழந்தை மீட்புக்குப் பிறகு  உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி அவரது தாயார் உயிரிழந்தார். குழந்தை மட்டும் உயிரோடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ட்விட்டரில் இதை  பயனர், “இன்னும் பெயர் இடப்படாத பெண் குழந்தை , இன்று சிரியாவில் அஃப்ரினில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளின் கீழ் பிறந்தாள். ஆனால் அவளுடைய பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள்.  பிறந்த உடன் அனாதையாக மாறிவிட்டாள் ” என்று உருக்கமான தலைப்போடு  வீடியோவை பதிவிட்டுள்ளார்.


First published:

Tags: Earthquake, Syria