இங்கிலாந்தில் ஒரு சிறிய தவறால் பெண்ணிற்கு வந்த 4,500 க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்ஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் ஹெலன் மக்மஹோன் என்ற பெண் வசித்து வருகிறார். அவரது ப்ரீபெய்ட் கார்டில் பேலன்ஸை மீதமுள்ள காலக்கெடுவிற்கு முன் முடிக்குமாறு ஒரு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மெயில் வந்தபின்னர் தான் அதிக அழைப்புகள் வந்ததாக ஹெலன் தெரிவித்துள்ளார்.
டிபார்ட்மென்ட் ஃபார் தி எகானமியின் ஸ்பேண்ட் லோக்கல் ஸ்கீம் என்ற ஒரு நிறுவனம் தற்செயலாக ஹெலனின் மொபைல் எண்ணை மின்னஞ்சலில் கொடுத்துள்ளது. அதாவது விளம்பரப்படுத்தப்பட்ட எண்ணில் ஒரு எண் தவறாக இருந்துள்ளது. அதனால் அந்த எண்ணிற்கு வந்த அழைப்புகள் அனைத்தும் ஹெலன் மக்மஹோனுக்கு வந்துள்ளது. வடக்கு அயர்லாந்தின் பாங்கூரை சேர்ந்த ஹெலன் அங்கு முதலுதவி பயிற்சி நிறுவனத்தில் இருக்கிறார். அவருக்கு தினமும் எண்ணற்ற அழைப்புகள் வந்துள்ளதால் குழப்பம் அடைந்துள்ளார்.
ALSO READ | தெரு நாயின் ஆண் உறுப்பை துண்டாக்கிய சைக்கோ கொடூரன்!
விபத்தை விளக்கிய அழைப்பாளர்களில் ஒருவரை மீண்டும் அழைத்த பிறகுதான் என்ன நடக்கிறது என்பதை ஹெலன் உணர்ந்தார். அவர் பிபிசியிடம் கூறினார், "ஸ்பண்ட் லோக்கல் திட்டத்தின் தொடக்கத்தில் எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தன, ஏனெனில் எனது லேண்ட்லைன் எண்ணிற்கும் அவர்களுடைய எண்ணிற்கும் இடையே ஒரு இலக்க வித்தியாசம் தான் இருந்தது. எனக்கு அழைப்பு விடுத்த அனைவரும் கிறிஸ்துமஸ் வர இருப்பதால் முதலுதவி பயிற்சியை தேடுகிறார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் பின்னர் தான் எனது தொலைபேசி எண் தவறாக விளம்பரப்படுத்தப்பட்டது என்று தெரிந்தது என்று விளக்கியுள்ளார்.
மேலும் உறவினர் இறந்து விட்டதாக தினமும் எனக்கு இரண்டு அல்லது மூன்று அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக ஒரு பெண் எனக்கு கால் செய்தார், அவர் தவறாக டயல் செய்ததை விளக்கினேன், பின்னர் அவருடைய மின்னஞ்சலை படித்து அதை எனக்கு அனுப்பினாள். அப்போது தான் நான் உணர்ந்தேன், என்னுடைய எண் தவறாக கொடுக்கப்பட்டிருப்பதை. ஓ மை குட்னெஸ், அதன் பின்னர் தான் இதற்கான தீர்வை தேடினேன்.
ALSO READ | பிரதமர் மோடியின் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் - என்ன ஸ்பெஷல்?
மேலும் எண் தவறானது என்பதை தெரிவிக்க ஹெலன் அவருக்கு கால் செய்தவர்களை திரும்ப அழைக்க முயன்றதாகவும், டயல் செய்த சில வயதானவர்கள் "மிகவும் மன உளைச்சலில்" இருந்தனர், அதனால் அவர்களுக்கு உதவ முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். ஐரிஷ் செய்தி அளித்த தகவலின் படி, சரமாரியான அழைப்புகளுக்கு பிறகு அந்த பெண், சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தொலைபேசியில் புகாரளித்துள்ளார். பின்னர் பொருளாதார துறை அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டது என தெரிவித்துள்ளது.
பொருளாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், "ஸ்பெண்ட் லோக்கல் கார்டு தொடர்பான கடிதப் பரிமாற்றத்தில் அவரது வணிகத் தொலைபேசி எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், துறை அதிகாரிகள் அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்" என கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Woman