ஹோம் /நியூஸ் /உலகம் /

எச்.ஐ.வி பாதித்த பெண்ணை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தி மருத்துவர்கள் சாதனை!

எச்.ஐ.வி பாதித்த பெண்ணை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தி மருத்துவர்கள் சாதனை!

HIV

HIV

HIV | இந்த நவீன முறை வெற்றியும் பெற்றது. அதன்படி ஸ்டெம் செல் முறையை கொண்டு எச்.ஐ.வி நோயால் குணப்படுத்தப்பட்ட முதல் பெண் என்கிற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகில் ஒவ்வொரு நாளும் பலவித நோய்கள் தோன்றிய வண்ணம் உள்ளது. சில நோய்களுக்கு எளிதில் சிகிச்சை தந்து குணப்படுத்தி விடலாம். அதே போன்று சில நோய்களுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை கொடுத்த பிறகு அதனை குணப்படுத்தலாம். ஆனால், ஒரு சில வகையான நோய்களை நாம் எவ்வளவு தான் சிகிச்சை கொடுத்தாலும் அதனை குணப்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும். எச்.ஐ.வி, புற்றுநோய், மற்றும் பாலியல் சார்ந்த பிற நோய்கள் குணப்படுத்த கூடியதாக இல்லை.

இருப்பினும் இன்றைய நவீன அறிவியலை கொண்டு இது போன்ற தீராத நோய்களுக்கு புது வித சிகிச்சை முறையினை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எச்.ஐ.வி நோயை குணப்படுத்த கூடிய சிறந்த முறையை அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த பெண் நோயாளி ஒருவருக்கு, எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸை இயற்கையாகவே எதிர்க்கும்தன்மை உள்ளவரிடம் இருந்து ஸ்டெம் செல்லாய் பெற்று மாற்று சிகிச்சையை செய்தனர்.

இந்த நவீன முறை வெற்றியும் பெற்றது. அதன்படி ஸ்டெம் செல் முறையை கொண்டு எச்.ஐ.வி நோயால் குணப்படுத்தப்பட்ட முதல் பெண் என்கிற அங்கீகாரத்தை பெற்றுள்ளார். மருத்துவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றதால் இனி வரும் காலங்களில் எச்.ஐ.வி போன்ற பாலியல் சார்ந்த நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ முறையில் விரைவில் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலும்பு மஜ்ஜையில் இரத்தத்தை உருவாக்கும் உயிரணுக்களில் தொடங்கும் புற்றுநோயான மைலோயிட் லுகேமியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரத்தத்தைப் பெற்றதில் இருந்து, இந்த பெண் 14 மாதங்களாக வைரஸிலிருந்து விடுபட்டுள்ளார். இந்த சிறந்த எச்.ஐ.வி சிகிச்சைகள் தான் அவரின் எச்.ஐ.வி வைரஸை குணப்படுத்தி உள்ளது.

Also Read : இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் (UCLA) டாக்டர். யுவோன் பிரைசன் மற்றும் பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் டெபோரா பெர்சாட் ஆகியோரின் தலைமையிலான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த புதிய சிகிச்சை முறை நடத்தப்பட்டது. புற்றுநோய் மற்றும் மற்ற மோசமான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தொப்புள் கொடியின் இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் இந்த நவீன சிகிச்சை முறை செய்யப்பட்டது. இந்த மாற்று அறுவை சிகிச்சை முறையை எச்ஐவி உள்ள 25 நபர்களுக்கு மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த பரிசோதனையில் உள்ள நோயாளிகள் முதலில் புற்றுநோய் நோயெதிர்ப்பு செல்களைக் கொல்ல கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட மரபணு மாற்றம் உள்ள நபர்களிடமிருந்து ஸ்டெம் செல்களை இடமாற்றம் செய்வார்கள். ஒருவேளை இந்த முயற்சி வெற்றி அடைந்தால், பலவித நோய்களுக்கும் ஸ்டெம் செல் முறையின் மூலம் தீர்வு காண முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் பல உயிர்களை இதன்மூலம் காப்பாற்ற முடியும்.

First published:

Tags: Health, HIV, Science