Home /News /international /

இது என்ன புதுசா இருக்கு? மெட்டாவெர்ஸ் மாய உலகில் கேங்க் ரேப்... பெண் ஒருவர் அதிர்ச்சி புகார்

இது என்ன புதுசா இருக்கு? மெட்டாவெர்ஸ் மாய உலகில் கேங்க் ரேப்... பெண் ஒருவர் அதிர்ச்சி புகார்

மெடாவெர்ஸ்

மெடாவெர்ஸ்

Metaverse : மெடா பற்றி நினா அளித்த புகார், அதிவேகமாக பரவியது. இதற்கு மெடா தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்று எதிர்பார்த்த வேளையில், மெடா நினாவிடம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது.

மெடாவெர்ஸ் என்ற விர்ச்சுவல் உலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கென்ற விர்ச்சுவல் வடிவம் உருவாக்கி, நீங்கள் விரும்பும் உலகில் விர்ச்சுவலாக வாழ முடியும். ஆனால், சமீபத்தில் ஒரு இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி மெடாவெர்ஸ் மீது அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். அந்தப் பெண்மணி விர்ச்சுவலாக ஒரு குழுவினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக புகாரை எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் தான் மெடா நிறுவனம் தனது தொடக்க நிலைப் பணியை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு கட்டமாக செயல்பட்டு வரும் நிலையில், தார்மீக ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. நினா ஜேன் பட்டேல் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 43. மெடா என்ற விர்ச்சுவல் உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவதார் (வடிவம்) வடிவமைத்துக் கொண்டு உலா வரலாம். மெடாவில் ஹாரிசான் வென்யூவில் நான்கு ஆண் அவதார்கள், வாய்மொழியாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

“அது ஒரு மோசமான கனவு. நிஜம் போலவே இருந்தது. அந்த ஆண் அவதார்கள் என்னை தகாத முறையில் பேசினார்கள், முறைகேடாக நடந்து கொண்டார்கள், கண்ட இடத்தில் தொட்டார்கள்” என்று தெரிவித்து, அதை உறுதிபடுத்தும் பல்வேறு ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.



இந்த பயங்கரமான அனுபவத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற உடனடியாக மெடாவில் இருந்து வெளியேறி தனது கணக்கை நீக்கிவிட்டதாகவும் ‘தி மெயில்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பெட்டியில் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மாஸ்க் கேள்வி பட்டிருக்கோம், அது என்னப்பா ‘கோஸ்க்’ - இது தென் கொரியாவின் அட்ராசிட்டி…

மெடா பற்றி நினா அளித்த புகார், அதிவேகமாக பரவியது. இதற்கு மெடா தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்று எதிர்பார்த்த வேளையில், மெடா நினாவிடம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது. பிசினஸ் இன்சைடர் இடம் மெடாவின் செய்தியாளர், “இப்படி நடந்ததை அறிந்து வருத்தப்படுகிறோம். ஹாரிசான் வென்யூசில் இருக்கும் அனைவரும் நல்ல அனுபவங்களைப் பெற வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.



அது மட்டுமின்றி இது போன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்புக் கருவிகளை எளிதாகப் பயன்படுத்த முடிய வேண்டும் என்று நினைக்கிறோம். இந்தப் புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உதவி செய்யுங்கள்.” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : 16 விநாடிகள் மாஸ்க்கை கழட்டியதற்கு ரூ.2 லட்சம் அபராதம்... எங்கே தெரியுமா?

மெடாவில் ஒரு பெண்ணுக்கு நடந்த இந்த மோசமான அனுபவத்தின் தாக்கத்தை நிறுவனம் உணர்ந்து உரிய முறையில் செயல்பட வேண்டும். ஏற்கனவே மெடாவின் நிறுவனமான ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்பு சில நாட்களுக்கு முன் $200 பில்லியன் டாலர் குறைந்தது. ஒட்டுமொத்த வருமானத்தில் 20% சரிவு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்களுக்கு அளித்த தகவலின் படி, மெடாவின் ரியாலிட்டி லாப்ஸ் நிறுவனத்தின் (விர்ச்சுவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வணிகம்) கடந்த ஆண்டு $6.6 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விர்ச்சுவல் உலகில் கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் புகாரால் மேலும் சந்தை மதிப்பு குறையக்கூடும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Metaverse

அடுத்த செய்தி