கைக் குழந்தையோடு நாடாளுமன்றத்திற்கு வந்த பெண் எம்.பி... வெளியேறச் சொன்ன துணை சபாநாயகர்...

தனியார் நிறுவனங்களில், குழந்தைகளை பராமரிப்பதற்கு தனியாக ஒரு வசதி உள்ளது. அதே போல் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் நான் என் குழந்தையை அதில் விட்டிருப்பேன் என்று அப்பெண் எம்பி தெரிவித்தார்.

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 3:22 PM IST
கைக் குழந்தையோடு நாடாளுமன்றத்திற்கு வந்த பெண் எம்.பி... வெளியேறச் சொன்ன துணை சபாநாயகர்...
கென்யா பெண் எம்.பி சுலைக்கா ஹசன்
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 3:22 PM IST
கென்யாவில் தனது கைக் குழந்தையுடன் நாடாளுமன்ற அவைக்கு உள்ளே வந்த பெண் எம்பியை துணை சபாநாயகரால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவில் பெண் எம்பியாக இருப்பவர் சுலைக்கா ஹசன், இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் ஒன்று 5 மாதக் குழந்தை.

நேற்று, நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன் அப்பெண், தனது 5 மாத கைக் குழந்தையை தன் நண்பர்களிடமோ,  உறவினர்களிடமோ  கொடுத்து விட்டு செல்லலாம் என இருந்தார். ஆனால், அத்தகைய சூழ்நிலை ஏற்படாததால், தன்னுடனே வைத்துக் கொண்டு  நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார்.   அவரை கண்டதும், நாடாளுமன்ற காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

அவர்களை எப்படியோ சமாளித்து, அவைக்கு உள்ளே வந்து அமர்ந்தார். நாடாளுமன்ற அவையும் கூடியது.

குழந்தையை கண்ட துணை சபாநாயகர் கிறிஸ்டோபர், குழந்தையை வெளியே யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு அவைக்கு வருமாறு உத்தரவிட்டார்.

துணை சபாநாயகர் குரலுக்கு ஆதரவாக, குழந்தையை அவைக்கு அழைத்து வந்ததற்கு சில ஆண் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அப்பெண் எம்பிக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர் குழந்தையுடன் வெளியேறினார்.

நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய அப்பெண் எம்பி செய்தியாளர்களிடம், நான் என் குழந்தையை என்னால் முடிந்த அளவுக்கு கூப்பிட்டு வரவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.

தனியார் நிறுவனங்களில், குழந்தைகளை பராமரிப்பதற்கு தனியாக ஒரு வசதி உள்ளது. அதே போல் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் நான் என் குழந்தையை அதில் விட்டிருப்பேன்.

பெண்கள் எல்லாத்துறைகளிலும் வரவேண்டும் என நினைக்கும் அரசு, பெண்களுக்கு ஏற்ற வகையில் சில வசதிகள் செய்தால் நன்றாக இருக்கும் என அப்பெண் எம்பி கூறினார்.

Also watch: காவல்நிலையத்தில் குற்றவாளிகள் பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கை உடையும் சம்பவத்தின் பின்னணி என்ன?

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...