அமெரிக்காவின் சாண்டியாகோ நகரம் கடற்கரைகளுக்கு மிகவும் பிரபலமான நகரம். சுற்றுலரா நகரமான இங்கு பாலியல் தொழில் களைகட்டும். இதனால் குற்றங்களுக்கும் குறைவில்லை. போதைப் பொருள் விற்பனை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறும். இதனால் சாண்டியாகோ காவல்துறை ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுவர்.
இந்நிலையில் மிஷன் வேல்லி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சாண்டியாகோ காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்துப் பணியில் இருந்த போது வித்தியாசமான நடவடிக்கைகளுடன் சுற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் காரை சோதனையிட்டுள்ளனர். காருக்குள் ஹோட்டல் அறைகளின் சாவி தயாரிக்க பயன்படும் கருவி, ஒரு ஆணின் காலணிகள் மற்றும் ஒரு துப்பாக்கி என வித்தியாசமான பொருட்கள் இருந்துள்ளது. இதனால் உஷாரான போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Also Read : ஆமை வடிவில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரம்.. ரூ.65000 கோடி செலவில் பிரமாண்டமான வடிவமைப்பு
விசாரணையில் அந்தப் பெண் சாண்டியாகோவில் உள்ள மிஷன் வேல்லி பகுதியில் உள்ள ரிவர்லீஃப் என்ற விடுதியில் துப்பாக்கி முனையில் கொள்யைடித்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று ஹோட்டலில் இருந்த சிசிடிவி மற்றும் கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட பெண் துப்பாக்கி முனையில் ஹோட்டல் ஊழியரிடம் இருந்து சாவி தயாரிக்கும் கருவி, அவருடைய ஷூக்கள் மற்றும் சிறிது பணம் இவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது.
அந்தப் பெண் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததை நேரில் பார்த்த ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், பெண்னின் பெயர் உள்ளிட்ட விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
இதே பெண் வேறு ஏதாவது கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாண்டியாகோ நகரில் இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும் என்றாலும், பெண் ஒருவர் துப்பாக்கியை காட்டி ஹோட்டல் ஊழியரிடம் கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொழுது போக்கிற்காக கடற்கரைகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் கும்பலும் சாண்டியாகோ நகரில் உள்ளன. இதை தடுக்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும், கடற்கரைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சாண்டியாகோ நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றச்சபம்வங்கள் நிகழ்ந்தால் தாமதிக்காமல் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும், அப்போது தான் குற்றவாளிகளை எளிதில் கைது செய்ய முடியும் எனவும் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.