Home /News /international /

Woke:அளவுக்கதிகமான மனித உரிமை, சமூக நீதி கூச்சல்- நெட்பிளிக்ஸ் சரிவுக்கு இதுவே காரணம்- எலான் மஸ்க்

Woke:அளவுக்கதிகமான மனித உரிமை, சமூக நீதி கூச்சல்- நெட்பிளிக்ஸ் சரிவுக்கு இதுவே காரணம்- எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஓடிடி தளமான நெட்பிளிக்சில் உள்ள படங்கள், வெப்சீரியல்கள், வீடியோ கேம்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களில் மனித உரிமை மற்றும் சமூக நீதிக் கூச்சல் அளவுக்கதிகமாக இருப்பதால் அதைப் பார்க்கவே முடியவில்லை என்று டெல்சா தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ஓடிடி தளமான நெட்பிளிக்சில் உள்ள படங்கள், வெப்சீரியல்கள், வீடியோ கேம்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களில் மனித உரிமை மற்றும் சமூக நீதிக் கூச்சல் அளவுக்கதிகமாக இருப்பதால் அதைப் பார்க்கவே முடியவில்லை என்று டெல்சா தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டரை வாங்கப்போவதாக பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க் தற்போது நெட்பிளிக்ஸ் பங்குகள் 25% சரிவடைந்ததையடுத்து, பல கோட்பாடுகள் எழுந்துள்ளன, சரிவுக்குக் காரணம் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. ட்விட்டரில் Woke என்ற வார்த்தை ட்ரெண்டிங் ஆகியுள்ளது. வோக் என்றால் சமூக நீதி, நிற/இன வெறிக்கு எதிரான , மனித உரிமைக்கான போராட்ட உள்ளடக்கங்கள் என்று சமூக - அரசியல்- பண்பாட்டு விமர்சன பிரக்ஞையைக் குறிக்கிறது.

    நெட்பிளிக்ஸில் உள்ள உள்ளடக்கங்கள் படங்கள் முதல் வீடியோ கேம்கள் வரை பல இந்த வகை சமூக நீதி, மனித உரிமை, மற்றும் அரசுக்கு எதிரான ஆதிக்கத்துக்கு எதிரான அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் உள்ளடக்கங்களாக வோக் பிரக்ஞை உள்ளடக்கங்களாக இருக்கின்றன என்பதே நெட்பிளிக்சின் பின்னடைவுக்குக் காரணம் என்கிறார் எலான் மஸ்க்.
    "The woke mind virus is making Netflix unwatchable." அதாவது சமூக விழிப்புணர்வு வைரஸ் நெட் பிளிக்ஸை பார்க்க முடியாததாக்கி விடுகிறது என்கிறார் எலான் மஸ்க்.

    எலான் மஸ்க்கின் இந்த விமர்சனத்துக்கு ஒத்து ஊதும் காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, இந்த மாதிரி வோக் சமூக விழிப்புணர்வு, மனித உரிமை, சமூக நீதி படங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் நெட்பிளிக்சிலிருந்து அனைத்து வாடிக்கையாளர்களையும் விரட்டியடித்து விடும் என்றும் சந்தாதாரர்கள் மட்டுமல்ல, என்னை நீண்ட காலம் முன்னரே இழந்து விட்டனர். இப்போது எலான் மஸ்க் அழைக்கிறார் என்றே நினைக்கிறேன் என்று அக்னிஹோத்ரி கூறியுள்ளார்.

    செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அதன் காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் Netflix இன் வாடிக்கையாளர் தளம் 200,000 சந்தாதாரர்கள் குறைந்துள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு வெளியே உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஸ்ட்ரீமிங் சேவை கிடைக்கப் பெற்ற பிறகு, நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்கள் வீழ்ச்சியடைந்தது இதுவே முதல் முறை. உக்ரைனுக்கு எதிரான போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து வெளியேறும் Netflix இன் முடிவில் இருந்து இந்த ஆண்டு வீழ்ச்சி ஏற்பட்டது, இதன் விளைவாக 700,000 சந்தாதாரர்கள் இழப்பு ஏற்பட்டது.

    எலோன் மஸ்க் இந்நிலையில் விஞ்ஞான புனைகதை, கற்பனை விஞ்ஞானப் புனைகதை உள்ளடக்கங்களைச் சேருங்கள் என்கிறார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Elon Musk, Netflix

    அடுத்த செய்தி