ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனாவால் 3 பேர் பாதிப்பு - 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு போட்ட சீனா!

கொரோனாவால் 3 பேர் பாதிப்பு - 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு போட்ட சீனா!

China Lockdown

China Lockdown

Yuzhou-வில், கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அனைத்து குடிமக்களும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :

  மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள யூசோவு (Yuzhou) நகரத்தில் மூன்று பேருக்கு அறிகுறியற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகர் முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். வைரஸ் முதன்முதலில் தோன்றியதிலிருந்து பெய்ஜிங் நகரம் இறுக்கமான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும்  ஊரடங்குகளுடன் "ஜீரோ கோவிட்" அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது.

  அதற்காக 3 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டதற்காக முழுஊரடங்கு அமல்படுத்தியது மக்களை மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாகியது. ஆனால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் திடீரென அப்பகுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், சீன அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, ஹெனான் மாகாணத்தில் சுமார் 1.17 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகரமான Yuzhou-வில், கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அனைத்து குடிமக்களும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  கடந்த இரண்டு நாட்களில் மூன்று நபர்களுக்கு பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. கடந்த திங்களன்று அதாவது ஜனவரி 3ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மத்திய பகுதியில் உள்ள மக்கள் "வெளியே செல்லக்கூடாது", அதே நேரத்தில் அனைத்து சமூகங்களும் "தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்டிப்பாக செயல்படுத்த சென்டினல்கள் மற்றும் வாயில்களை" அமைக்கும் என்று மாகாணம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  Also read:  10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா

  அதேபோல யூசோவு நகரத்தில் பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளை நிறுத்துவதாகவும், வணிக வளாகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை மூடுவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று சீனாவில் மேலும் 175 பேருக்கு புதிதாக கோவிட் -19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஹெனான் மாகாணத்தில் ஐந்து மற்றும் கிழக்கு நகரமான நிங்போவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையுடன் இணைக்கப்பட்ட ஒரு தனி கிளஸ்டரில் மேலும் எட்டு பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

  உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது யூசோவு நகரத்தில் பதிவான பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், சமீபத்திய வாரங்களில் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் மார்ச் 2020ம் ஆண்டில் இருந்த பாதிப்புகளை விட உயர்வை எட்டியுள்ளன. இதன் காரணமாக சீனாவின் பல மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

  Also read:  Omicron | மெட்ரோ நகரங்களில் ஏற்படும் பாதிப்புகளில் 75% ஓமைக்ரான் தான் - மூத்த விஞ்ஞானி

  யூசோவு மாகாணத்தின் அண்டை நாடான ஷாங்க்சி மாகாணத்தில் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் வரலாற்று நகரமான சியானில் சமீபத்தில் 95 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அப்பகுதி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. டிசம்பர் 9 முதல் Xi'an 1,600 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த வார புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது கடந்த சில நாட்களில் அப்பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

  Also read:  16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் - வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி

  அதேபோல, சீனாவில் வைரஸ் பரவுவதை தடுப்பதில் தோல்வியுற்றதாக கருதப்படும் உள்ளூர் அதிகாரிகள் அடிக்கடி பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள். Xi'an பகுதியின், வடக்கு நகரத்தில் இரண்டு மூத்த கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் கொரோனா வெடிப்பைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் போதிய கடுமையின்மை காட்டாததன் காரணமாக அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

  பாதிப்புகளை விரைவாக கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம். கடந்த மாதம், சீனாவின் ஒழுங்குமுறை அமைப்பு, நகரத்தில் கொரோனா பாதிப்பைத் தடுக்கத் தவறியதற்காக டஜன் கணக்கான அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியதாக அறிவித்தது. பெய்ஜிங் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தயாராகி வரும் நிலையில் இந்த தொற்றுநோய் ஸ்பைக் ஆரம்பமாகியுள்ளது.

  Published by:Arun
  First published:

  Tags: China, Lockdown