பிரட்டனைச் சேர்ந்த 178 ஆண்டுகள் பழமையான பிரபல பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடு நிறுவனமான தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
பிரிட்டனின் அடையாளமாக கருதப்படும் இந்த நிறுவனம் 1841-ம் வருடம் தாமஸ் குக் என்பவரால் தொடங்கப்பட்டது. லீசெஸ்டர்ஷையர் மக்களுக்கு ரயிலில் ஒருநாள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் வசதிகளை ஆரம்பத்தில் செய்து கொடுத்து வந்தது.
பின்னர், பிரிட்டனில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சுற்றுலா செல்ல பயணிகளுக்கு ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான வசதிகளைச் செய்தது.
அதன் பிறகு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எனத் தனது சேவையை விரிவாக்கியது. தனது சொந்த விமான சேவைகளையும் நடத்தி வந்தது.
178 ஆண்டுகளுக்கு பிறகு அசூர வளர்ச்சி பெற்று வந்த இந்த நிறுவனம். ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்தது. இந்நிறுவனத்திற்கு சுமார் 2 கோடி பேர் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.
16 நாடுகளில் கிளைகளை கொண்ட தாமஸ் குக்கில் 22 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென, இதனை மூடுவதாக தாமஸ் குக் நிறுவனத்தின் செயல் அதிகாரி பீட்டர் பிரான்க்உசர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 22 ஆயிரம் பேரும் வேலை இழந்துள்ளனர்.
தாமஸ் குக் நிறுவன விமானங்களின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளவர்களை அழைத்து வர பிரிட்டன் அரசாங்கம் 45 ஜெட் விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. ஆபரேஷன் மேட்டர்ஹார்ன் என்ற இந்த நடவடிக்கை, அமைதிக்காலத்தில் நடைபெறும் மிகப்பெரிய நாடு திரும்பல் என அழைக்கப்படுகிறது.
தாமஸ் குக் நிறுவனத்திற்கு 12 ஆயிரத்து 459 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதனை திருப்பி செலுத்து தனக்கு சொந்தமான விமானங்களை விற்றதும், இந்நிறுவனம் திவாலாக ஒரு காரணமான கூறப்படுகிறது.
புற்றிசல் போல முளைத்துள்ள, இணைய சுற்றுலா பதிவு மையங்கள் தாமஸ் குக் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக உருவெடுத்தன. இவற்றுடன் போட்டி போட முடியாமல் முடங்கிதான் போனது தாமஸ் குக்.
2010 - ஆம் ஆண்டு வெடித்த அரபு புரட்சி, தாமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தாமஸ் குக்கின் முக்கிய சுற்றுத்தலங்களான துனிசியா, துருக்கி, எகிப்து நாடுகளுக்கு 2010- ம் ஆண்டுக்கு பிறகு யாரும் பயணம் மேற்கொள்ளவில்லை. பிரிட்டனின் பிரெக்சிட் பிரச்னையும் தாமஸ் குக்-கை முடக்கிப்போட்ட மற்றொரு காரணியாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BREXIT, Thomas cook