Home /News /international /

ராணுவ வீரரையா ஒலிம்பிக் ஜோதியை ஏந்தச் செய்வது?- இந்திய கண்டனத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு

ராணுவ வீரரையா ஒலிம்பிக் ஜோதியை ஏந்தச் செய்வது?- இந்திய கண்டனத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு

ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் சீன ராணுவவீரர்.

ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் சீன ராணுவவீரர்.

சீன ராணுவ சிப்பாயை ஒலிம்பிக் ஜோதியாகப் பயன்படுத்தியதற்காக சீனாவைக் கண்டித்த அமெரிக்கா, இந்தியாவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களைத் தாக்கிய பிஎல்ஏ ராணுவ சிப்பாயை, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு ஜோதி ஏந்தியவராகத் தேர்ந்தெடுத்ததற்காக அமெரிக்க எம்.பி.க்கள் சீனாவைக் கண்டித்தனர். சீனா வேண்டுமென்றே இந்தியாவின் ஆத்திரத்தைத் தூண்டுகிறது என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...

    “இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை என்று வரும்போது ​​நாங்கள் நேரடி உரையாடல் மற்றும் சண்டைகளுக்கு அமைதியான, சுமுகமான தீர்வுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம், ”என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வியாழக்கிழமை தனது தினசரி செய்தி மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.

    சீனா அண்டை நாடுகளை அச்சுறுத்தும் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து நாங்கள் முன்பே எங்கள் கவலைகளை தெரிவித்துள்ளோம். நாங்கள் எப்போதும் போல, எங்கள் நட்பு நாடுகளுக்காக நிற்கிறோம். இந்தோ-பசிபிக் பகுதியில் சமாதானம் நிலவ எங்களது பாதுகாப்பு முழுமையையும் பயன்படுத்துவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 2020 இல் இந்திய வீரர்களுடன் நடந்த எல்லை மோதலின் போது காயமடைந்த மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) படைப்பிரிவு தளபதி குய் ஃபபாவோவை ஒலிம்பிக் ஜோதியை எந்திச் செல்லும் சீனாவின் முடிவிற்கு முந்தைய நாள், இரண்டு உயர்மட்ட அமெரிக்க செனட்டர்கள் சீனாவைக் கண்டித்தனர்.

    மற்றொரு ட்வீட்டில், சக்திவாய்ந்த அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் ரேங்கிங் உறுப்பினரான செனட்டர் ஜிம் ரிஷ், இந்தியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார்.

    அவர் மேலும், “2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கிய, உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் ஈடுபட்ட ராணுவத்தின் அங்கமான ஒருவரை ஒலிம்பிக் ஜோதியை ஏந்தச் செய்தது கண்டிக்கத்தக்கது, உய்குர்முஸ்லிம்களின் விடுதலைக்கும் இந்திய இறையாண்மைக்கும் அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும்” என்றார்.

    ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவில் நடக்கும் கொடூரமான மனித உரிமை மீறல்களில் இருந்து உலகளாவிய கவனத்தை திசை திருப்பும் முகத்தை வெளிப்படுத்த, ஒலிம்பிக்கின் மினுமினுப்பையும் கவர்ச்சியையும் பயன்படுத்த சீன அரசாங்கம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி இது என்று குற்றம் சாட்டினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: China, US

    அடுத்த செய்தி