ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒயினை பிரசாதமாக வழங்கும் ஜப்பானிய புத்த கோவில்..! - காரணம் தெரியுமா?

ஒயினை பிரசாதமாக வழங்கும் ஜப்பானிய புத்த கோவில்..! - காரணம் தெரியுமா?

ஜப்பான் கோவில்

ஜப்பான் கோவில்

புத்த கோவில் டெய்சென்ஜி என்று அழைக்கப்பட்டாலும் நாட்டின் திராட்சை உற்பத்தியின் வரலாற்றில் ஆழமான வேரூன்றிய தொடர்புகள் காரணமாக இது "திராட்சை கோவில்" என்று பெயர் பெற்றது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொதுவாக கோவில்களில் பிரசாதம் என்றால் பொங்கலும் புளியோதரையும் தான் நமக்கு தெரியும். அதிகபட்சம் பஞ்சாமிர்தம் கிடைக்கும். இந்து ஆலயங்களில் மது கொடுப்பது என்று நாம் கேட்டிராத ஒன்று. ஆனால் ஜப்பானில் மது அருந்தாதே என்று சொல்லும் புத்தர் கோவிலில் மது பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஜப்பானில் டோக்கியோவிற்கு மேற்கே 100 கிலோமீட்டர்கள் (60 மைல்) தொலைவில் மரங்கள் நிறைந்த புஜி மலைப்பகுதியில் உள்ள டெய்சென்ஜி (Daizenji) எனும் புத்த கோவிலில், திராட்சை மற்றும் மது காணிக்கையாக வழங்கப்படுகின்றன. இதன் தலைமை துறவி ஒரு திராட்சைத் தோட்ட கூட்டுறவு நிறுவனத்தின் கௌரவத் தலைவராகவும் உள்ளார்.

அதிகாரப்பூர்வமாக, இந்த புத்த கோவில் டெய்சென்ஜி என்று அழைக்கப்பட்டாலும் நாட்டின் திராட்சை உற்பத்தியின் வரலாற்றில் ஆழமான வேரூன்றிய தொடர்புகள் காரணமாக இது "திராட்சை கோவில்" என்று பெயர் பெற்றது. ஜப்பானின் சிறந்த ஒயின் தயாரிக்கும் இடமாகவும் மாறியுள்ளது.

மற்ற புத்த கோவில்களில், பிரசாதமாக பல்வேறு பண்டங்களை வழங்குகிறார்கள். ஆனால் இங்கே, மதுவை பிரசாதமாக வழங்குவது தனித்துவமான வழக்கமாக உள்ளது என்று 75 வயதான தலைமை துறவி டெஷு இனோவ் விவரிக்கிறார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் அற்புதமான 6 இடங்கள்!

வரலாறு:

கி.பி 718 இல், பிரபல ஜப்பானிய புத்த துறவியும் பயணியுமான கியோகி, ஜப்பானிய மொழியில் யகுஷி நியோராய் என்று அழைக்கப்படும் மருத்துவ புத்தரை இன்று கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கனவில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அவரது கையில், நியோராய் திராட்சை கொத்து வைத்திருந்தார். அதிலிருந்து தான் கியோகி மருத்துவ நோக்கங்களுக்காக மதுவை எப்படி தயாரிப்பது என்று கற்றுக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

டிஎன்ஏ பகுப்பாய்வில், மலைப் பகுதியில் விளையும் பழமையான திராட்சை வகை -- ஐரோப்பாவில் முதலில் பயிரிடப்பட்ட ஒரு கொடி வகை மற்றும் காட்டு சீன கொடியின் கலப்பினம் என்பது தெரிகிறது. ஆசியாவில் பௌத்தம் தன்னை நிலைநிறுத்திய அதே வழியில் வணிகத்திற்கான பட்டுப்பாதை வழியாக இந்த திராட்சை கலப்பு ஜப்பான் அடைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

மற்றொருபுறம், சீனாவில் இருந்து விதைகள் அல்லது கொடிகள் கோயில்களின் மைதானத்தில் நடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 1868 முதல் 1912 வரையிலான மெய்ஜி சகாப்தத்தில் தான், மேற்கத்திய உலகில் ஆர்வம் வெடித்து, ஜப்பானில் ஒயின் உற்பத்தி தொடங்கியது என்றும் ஒரு கூற்றும் உண்டு.

இந்த பகுதியின் வளமான மண் மற்றும் திராட்சை வளரும் நீண்ட வரலாறு, யமனாஷி முதல் திராட்சைத் தோட்டங்களுக்கான வெளிப்படையான தேர்வாக இருந்திருக்கலாம். இன்றும் கூட, டெய்சென்ஜி கோவில், பெர்கோலா அமைப்புகளில் வளர்க்கப்படும் திராட்சைகளால் சூழப்பட்டுள்ளது.

நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC-ன் அற்புதமான பேக்கேஜ் இதோ!

ஜப்பானின் இந்த சிறிய ஆலயத்தில் யாகுஷி நியோராயின் புகழ்பெற்ற திராட்சை கொத்துகளுடன் இருக்கும் சிலை, பழமையான செர்ரி-மரத்தால் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னால் இருக்கும் பலி பீடத்தில் பிரசாதமாக கொடுக்கும் திராட்சை வைன்கள் எப்போதும் வைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு தங்க இலைகளால் அலங்கரிக்கப்பட்ட அரக்கு சிற்பம், கோவிலுக்கு சொந்தமான ஒரு விலைமதிப்பற்ற கலைப் பொருளாக உள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மக்கள் முன், காட்சிக்கு வைக்கப்படுகிறது. டெய்சென்ஜி கோவில் அதன் சொந்த திராட்சைகளையும், கோவிலின் பெயரைக் கொண்ட மது பாட்டில்களையும் விற்பனை செய்து வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Buddhism, Japan, Wine