Home /News /international /

அம்மா சொர்க்கத்தில் சந்திக்கிறேன்.. போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி உருக்கமான கடிதம்

அம்மா சொர்க்கத்தில் சந்திக்கிறேன்.. போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி உருக்கமான கடிதம்

உக்ரைன்

உக்ரைன்

வானத்தில் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சொர்க்கத்திற்கு நீ செல்ல வேண்டும். நாம் சொர்க்கத்தில் சந்திப்போம். நல்ல பெண்ணாக இருந்து சொர்க்கத்திற்கு வர நான் முயற்சிக்கிறேன் என போரில் உயிரிழந்த தனது தாயாருக்கு உக்ரைன் சிறுமி உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    உக்ரைனை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் போரில் உயிரிழந்த தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்  சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்யா ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், இதுவரை நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைனை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் போரில் உயிரிழந்த தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தை உக்ரைன் உள் விவகாரங்களுக்கான அமைச்சரின் ஆலோசகர் ஆன்டன் கிராசென்கோ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சிறுமி அந்த கடிதத்தில், அம்மா, இந்த கடிதத்தை மார்ச் 8ஆம் தேதி உனக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன். எனக்கு ஒன்பது வருடங்கள் சிறந்த வாழ்நாள்களை தந்த உனக்கு நன்றி. எனது குழந்தைப் பருவத்தை சிறப்பாக்கிய உனக்கு நான் நன்றிக்கடன் பெற்றுள்ளேன்.

    உலகின் தலைசிறந்த தாய் நீ தான். உன்னை நான் மறக்கவே மாட்டேன். வானத்தில் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சொர்க்கத்திற்கு நீ செல்ல வேண்டும். நாம் சொர்க்கத்தில் சந்திப்போம். நல்ல பெண்ணாக இருந்து சொர்க்கத்திற்கு வர நான் முயற்சிக்கிறேன். அன்பு முத்தங்களுடன், கலியா என அச்சிறுமி தனது கைப்பட உருக்கமாக கடிதத்தை எழுதியுள்ளார்.

    இதையும் படிங்க: யுத்த பூமியில் போரீஸ் ஜான்சன்.. உக்ரைன் கீவ் நகர தெருக்களில் நடந்து பார்வையிட்டார்...


    இந்த சிறுமியின் தாயார் போரோட்யன்கா என்ற பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமும் பதற்றமான சூழலில் உள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அணிதிரண்டு செயலாற்றிவருகின்றன. இந்நிலையில், உக்ரனைக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் பதவி வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Russia - Ukraine, War

    அடுத்த செய்தி