ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆக வாய்ப்பு - தேர்தல் எப்போது?

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆக வாய்ப்பு - தேர்தல் எப்போது?

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று ராஜினாமாவை அறிவித்த நிலையில் தற்போது பிரதமர் பதவிக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • internatio, IndiaBritain Britain

  பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் லிஸ் டிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அதனையடுத்து உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த கட்சியில் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்குத் தகுதியான தலைவரைத் தேர்ந்தெடுப்பர்.

  அதில் இந்திய வம்சாவளியான 42 வயதான ரிஷி சுனக்- க்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சியில் பாராளுமன்ற அமைச்சராக இருக்கும் ரிஷி சுனக், முன்னாள் அதிபர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை அடுத்து கட்சியில் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்காக லிஸ் டிரஸ்யை எதிர்த்துப் போட்டியிட்டார்.

  அதில் அவர் தோல்வியை அடைந்த நிலையில் தற்போது அவருக்குக் கட்சியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. கட்சியில் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதவாகப் பேசிவருகின்றனர். நேற்றிலிருந்து #Readyforrishi என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.

  கன்சர்வேட்டிவ் கட்சியில் 1922 கமிட்டியின் தலைவரான கிரஹாம் பிராடி தற்போது கட்சியின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இந்த மாதம் 31ம் தேதி நிதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதற்குள் கட்சியின் தலைவர் தேர்ந்துத்தெடுக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

  அதன் அடிப்படையில் வரும் அக்டோபர் 28 தேதி பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

  கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் முறை:

  கட்சியில் தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 24ம் தேதி மதியம் 2 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஒரு போட்டியாளருக்கு சுமார் 100 எம்.பி.களாவது ஆதரவு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் 357 பேருக்கு ஏற்ற மூன்று போட்டியாளர்கள் மட்டுமே விண்ணப்பம் போட அனுமதிக்கப்படுவர்.

  அதன் பின்னர் ஓட்டெடுப்பு நடத்தப்படும். அக்டோபர் 24ம் தேதி மதியம் 3.30 மணியில் இருந்து 5.30 மணி வரை நடத்தப்படும் வாக்கெடுப்பில் எம்.பி -கள் தங்கள் வாக்குக்களை செலுத்துவர். அதன்  முடிவு அன்று மாலை 6.00 மணிக்கு அறிவிக்கப்படும். அப்படி அதில் சரியான ஆதரவு பெறப்படாத நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 100 ஓட்டுகளுக்கு அதிகம் தேவை. இரண்டாம் முறை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டால் அதே நாள் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 9.00 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

  Also Read : பூமிக்கு வந்ததா UFO மர்ம விண்கலங்கள்..பசிபிக் கடல் பகுதியில் பறந்ததாக அமெரிக்க விமானிகள் பரபரப்பு தகவல்!

  பின்னர் அக்டோபர் 28 ம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுப் பதவியேற்றுக் கொள்வார். இந்த தேர்தல் போட்டியில் தற்போது வரை வந்த தகவலின் படி ரிஷி சுனக் முதல் இடத்திலும், பென்னி மோர்டான்ட் இரண்டாம் இடத்திலும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

  விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுத் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் பிரிட்டனின் அரசியல் வரலாற்றை யார் மாற்றி அமைக்கப்போகிறார் என்று தெரியவரும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Britain, Election, Prime minister