ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுகிறதா பிரேசில்?

உலக சுகாதார அமைப்பிலிருந்து பிரேசில் விலகப்போவதாக அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ எச்சரித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுகிறதா பிரேசில்?
பிரேசில் அதிபர் போல்சொனாரோ (படம்: Reuters)
  • Share this:
தென் அமெரிக்கப் பகுதியில் நிலவும் கொரோனா பாதிப்பு கவலைக்குரியது என்றும் வைரஸ் பரவல் குறைவதற்கு முன் ஊரடங்கைத் தளர்த்துவது அபாயகரமானது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.

கொரோனா பரவலில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு அதிபர் போல்சொனாரோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வைரஸ் தொற்று, பொதுச்சுகாதாரத்தை விட பொருளாதாரத்திற்கு அதிக ஆபத்தை விளைவித்திருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த அவர், அரசியல் சார்புடைய அமைப்பாக இருப்பதை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தவில்லை என்றால் பிரேசில் அந்த அமைப்பிலிருந்து விலகும் என்று எச்சரித்தார்.


Also see:
First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading