'உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்யப்பட்டுள்ளார் அசாஞ்சே’ - ஐ.நா

50 வார தண்டனையை அனுபவித்து வரும் அசாஞ்சே அமெரிக்காவுக்குத்தான் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிக்கப் போராடி வருகிறார்.

Web Desk | news18
Updated: June 1, 2019, 1:33 PM IST
'உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்யப்பட்டுள்ளார் அசாஞ்சே’ - ஐ.நா
ஜூலியன் அசாஞ்சே. (Image: Reuters)
Web Desk | news18
Updated: June 1, 2019, 1:33 PM IST
நீண்ட காலமாக உளவியல் ரீதியான துன்புறுத்தல்களை விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே சந்தித்துள்ளார் என ஐ.நா-வின் மூத்த நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஐநா-வில் துன்புறுத்தல்கள் குறித்து ஆராயும் மூத்த நிபுணரான நில்ஸ் மெல்சர் ஐக்கிய நாடுகள் சிறையில் உள்ள விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நேற்று சந்தித்தார். சமீபத்திய நீதிமன்ற வழக்கு விசாரணையின் வீடியோவில் அசாஞ்சே மிகவும் சோர்வாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து ஐநா நிபுணரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்சே வைக்கப்பட்டுள்ளார். 50 வார தண்டனையை அனுபவித்து வரும் அசாஞ்சே அமெரிக்காவுக்குத்தான் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிக்கப் போராடி வருகிறார்.


ஐநா-வின் நில்ஸ் மெல்சர் அசாஞ்சேவை சந்தித்தப் பின்னர், “அசாஞ்சே கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார். அவரை இத்தகைய சூழலில் அமெரிக்காவுக்கு நாடு கடத்த முயல்வது சரி ஆகாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: பிரதமர் மோடியை வரவேற்க்கக் காத்திருக்கிறோம் - இலங்கை அதிபர்
Loading...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...