விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது!

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Web Desk | news18
Updated: April 11, 2019, 3:43 PM IST
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது!
ஜூலியன் அசாஞ்சே
Web Desk | news18
Updated: April 11, 2019, 3:43 PM IST
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம், ராணுவம் குறித்த முக்கிய ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சே உலகப் பிரபலம் ஆனார். ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவரான அசாஞ்சேவைக் கைது செய்ய அமெரிக்கா பலமுறை முயற்சித்து வந்தது.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஈக்வேடார் தூதரகத்தில் உள்ள அசாஞ்சேவை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஈக்வேடார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் அசாஞ்சேவின் பாஸ்போர்ட் வேலிடிட்டி முடிந்ததால் அவரது நிலை சிக்கலாகியது.


அசாஞ்சேவின் உடல் நிலையும் சிக்கலாகி உள்ள நிலையில் அவர் எளிதாக ஆஸ்திரேலியா பயணிக்க முடியாது எனக் கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் அவரது பாஸ்போர்ட் சிக்கல்கள் சரி செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்று ஈக்வேடார் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அசாஞ்சேவை லண்டன் போலீஸார் கைது செய்தனர். கடந்த 2012-ம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வாரண்டின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் அசாஞ்சே.

மேலும் பார்க்க: தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்!

Loading...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...