விக்கி லீக்ஸ் அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கலாம்!

முதலில் தண்டனை அளிப்பது அமெரிக்காவா? ஸ்வீடனா? என்ற முடிவை எடுக்கும் பொறுப்பு தற்போது பிரிட்டனிடம் உள்ளது.

Web Desk | news18
Updated: May 25, 2019, 6:41 AM IST
விக்கி லீக்ஸ் அசாஞ்சேவுக்கு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கலாம்!
ஜூலியன் அசாஞ்சே
Web Desk | news18
Updated: May 25, 2019, 6:41 AM IST
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது 17 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சுமார் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கம், ராணுவம் குறித்த முக்கிய ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சே உலகப் பிரபலம் ஆனார். ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவரான அசாஞ்சேவைக் கைது செய்ய அமெரிக்கா பலமுறை முயற்சித்து வந்தது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் அசாஞ்சே கைது செய்யப்பட்டார். தற்போது அமெரிக்கா அசாஞ்சே மீது சுமார் 18 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் சேர்த்து தண்டனை வழங்கப்பட்டால் சுமார் 175 ஆண்டுகள் அசாஞ்சேவுக்கு சிறைத்தண்டனை கிடைக்குமாம்.


மேலும், ஸ்வீடன் நாட்டிலும் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றும் அசாஞ்சே மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் உள்ள ஒரு சிறையும் 50 வார சிறைத்தண்டனை பெற்றுள்ளார் அசாஞ்சே. முதலில் தண்டனை அளிப்பது அமெரிக்காவா? ஸ்வீடனா? என்ற முடிவை எடுக்கும் பொறுப்பு தற்போது பிரிட்டனிடம் உள்ளது.

மேலும் பார்க்க: ஜூன் 7-ம் தேதி பதவி விலகுகிறார் தெரேசா மே!

First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...