ஹோம் /நியூஸ் /உலகம் /

விவாகரத்து தரவில்லையென்றால் வீதியில் நிர்வாணமாக செல்வேன்- கணவனை மிரட்டிய மனைவி

விவாகரத்து தரவில்லையென்றால் வீதியில் நிர்வாணமாக செல்வேன்- கணவனை மிரட்டிய மனைவி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சவுதி அரேபியாவில் பெண் ஒருவர் தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு உள்ளார். இல்லையென்றால், வெளியே நிர்வாண ஊர்வலம் செல்வேன் என்று அதிரடியாக மிரட்டி உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருமணம் என்பது ஆயிரங் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பன சொல்வடைகள் தமிழில் உண்டு. ஆனால் என்னதான் திருமணத்தைப் பார்த்து பார்த்து நடத்தினாலும் விவாகரத்தை நோக்கி திருமண பந்தம் செல்லாது என்று உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் விவாகரத்துக்கு காதல் திருமணங்களும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் விவாகரத்து விகிதம் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்தநிலையில், சவுதி அரேபியாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண் ஒருவர் அவரது கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார். அவர், கொடுக்க மறுத்தால் நிர்வாண ஊர்வலமாக செல்வேன் என்று மிரட்டியுள்ளார்.

வேறு வழி இல்லாத நிலையில், கணவன் ஷரியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவாகரத்து முடிவு தனது விருப்பத்திற்கு எதிரானது என்றும் அதனால் அதனை ரத்து செய்யும்படியும் கேட்டு கொண்டார். எனினும், அவரது வழக்கை எடுத்து கொள்ள நீதிமன்றம்மறுத்து விட்டது. ஷரியா சட்டத்தின்படி விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என அவரிடம் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு மணிநேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகின்றன என அந்நாட்டு புள்ளியியலுக்கான பொது அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்கு திகைக்க வைக்கும் வகையில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டன என்றும் தெரிவித்து உள்ளது.

First published:

Tags: Divorce