ஹோம் /நியூஸ் /உலகம் /

மரண குழியில் இருந்து போலீசாருக்கு சென்ற போன்கால்.. சினிமாவை மிஞ்சும் ஷாக் சம்பவம்!

மரண குழியில் இருந்து போலீசாருக்கு சென்ற போன்கால்.. சினிமாவை மிஞ்சும் ஷாக் சம்பவம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குழியில் புதைக்கப்பட்ட நபர் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்குக் கால் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaUnited states of America United states of America

  அமெரிக்கா வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன், அவரின் கணவர் கத்தியால் குத்தி தன்னை குழியில் போட்டுப் புதைத்து விட்டதாகக் கையில் கட்டிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்குக் கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

  அதனையடுத்து, காவல்துறை அவர் இருக்கும் இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்குள்ளேயே அவர் தானவே கட்டை அவிழ்த்து குழியிலிருந்து போராடி வெளியில் வந்துள்ளார். அவரைப் படுகாயங்களுடன் உடலில் டேப் வைத்துக் கட்டிய அடையாளங்களுடன் காவல் துறையினர் மீட்டுள்ளார்.

  இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கணவர் தான் இப்படி ஒரு காரியம் செய்தது என்று தெரிய வந்துள்ளது. 53 வயதான சே கியோங் என்ற அவரின் கணவருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த காரணத்தினால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

  இந்த நிலையில், கடந்த அக்டோபர் 16ம் தேதி இருவருக்கும் இடையே பண தகராற்றில் பெரிய சட்டை வந்துள்ளது. அப்போது என்னுடைய ஓய்வு ஊதிய பணத்தை உன்னிடம் கொடுப்பதை விட உன்னை கொல்லுவதே சரி என்று அவர் கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.

  Also Read : அமெரிக்காவின் நியூயார்க்கில் அடுத்த ஆண்டு முதல் தீபாவளியன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

  மேலும் அவரின் கை கால்களை டேப் மூலம் கட்டி வண்டியில் போட்டுக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று குழி தோண்டி அதில் அவரைப் போட்டுப் புதைத்துள்ளார். விரைவில் நினைவு தெளிந்த அவர் கையிலிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்கு அழைப்பு விடுத்து அதிலிருந்து போராடித் தப்பித்துள்ளார்.

  இந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டும் அல்ல கேள்விப்பட்ட அனைவருக்குமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: America, Apple watch, Crime News