முகப்பு /செய்தி /உலகம் / 5 மாதங்களுக்குப் பின் பொதுவெளிக்கு வந்த வடகொரிய அதிபர் கிம்மின் மனைவி!

5 மாதங்களுக்குப் பின் பொதுவெளிக்கு வந்த வடகொரிய அதிபர் கிம்மின் மனைவி!

வடகொரிய அதிபர் கிம்-ன்

வடகொரிய அதிபர் கிம்-ன்

Kim Jong Un wife : வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனைவி ரி சோல் ஜு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் முதன் முறையாக பொது வெளியில் தோன்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலக நாடுகளே உற்றுநோக்கும் வடகொரியாவின் சர்வாதிகார ஜனாதிபதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கிம் ஜாங் உன். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்கள் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை போலவே, தனது மனைவியான ரி சோல் ஜு-க்கும் (Ri Sol Ju) கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது தனது சொந்த குடும்பத்தினரை பார்க்க கூடாது, பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என கடுமையாக கட்டுப்பாடுகளை கிம் தனது மனைவிக்கு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பொது இடங்களில் ரி சோல் ஜுவை (Ri Sol Ju) மட்டும் தனியாக பார்ப்பது என்பது நடக்காத விஷயம். எப்போதுமே கணவர் கிம் ஜாங் உடன் மட்டுமே ரி சோல் தென்படுவார். பெரும்பாலும் கிம் ஜாங் உன்னின் மனைவி ரி சோல், அவருடன் கலாச்சார, கலை நிகழ்ச்சிகள் மற்றும் ராணுவ நிகழ்வுகளுக்கும் உடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் 5 மாதங்கள் கழித்து வடகொரியாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபரும், தனது கணவருமான கிம் ஜாங் உன்னுடன் பொது வெளியில் தோன்றியது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள் : அரச குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் தாய்மைக்கு உரிய கடமை தவறாத கேட் மிடில்டன்!

வடகொரியாவின் புத்தாண்டை முன்னிட்டு, தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே அரங்கத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அந்நிகழ்ச்சியில் மனைவி ரி சோல் ஜு உடன் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் ரி சோல் ஜு, கிம் உடன் பங்கேற்றார். தனது குழந்தைகள் பற்றிய தகவல்களை கிம் மிகவும் எச்சரிக்கையுடன் பராமரித்து வருகிறார்.

எனவே ரி சோல் ஜு கர்ப்பமாக இருக்கலாம் , அதனால் தான் வெளியே வருவதில்லை என்ற தகவல்கள் பரவிய நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு பொது இடத்தில் தோன்றி அதிர்ச்சி கொடுத்துள்ளது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : எத்தியோப்பியாவில் பசியால் வாடும் 46 லட்சம் மக்கள் - உணவுக்காக பிச்சை எடுக்கும் மருத்துவர்கள்

இதற்கு முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதனால் அவர் மூளைசாவு அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏன் கிம் ஜாங் உன் உயிரிழந்திருக்கலாம் என்ற கூட வடகொரியாவிற்கு வெளியே உள்ள சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக பல மாதங்கள் பொது இடத்திற்கு வராமல் இருந்த கிம், திடீரென தோன்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kim jong un, South Korea