சில சூழல்களில் நம்மை நாம் அதற்கு தகுந்தாற்போல மாற்றி கொள்ளவில்லை என்றால், நமது வாழ்வியல் என்பது கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிடும். நாம் வாழ்க்கை நடத்த சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டாக வேண்டி உள்ளது என்பதை பல நேரங்களில் நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அதே போன்று சிலரது வாழ்வியல் என்பது அவர்களின் கையில் முற்றிலும் இல்லாத ஒன்றாக இருக்கும். இப்படி ஒரு சூழலில் மாட்டிக்கொண்ட ஒரு பெண்மணி தான் தனது மோசமான வாழ்வியலுக்காக தனது 13 பற்களை இழந்துள்ளார்.
இங்கிலாந்தின் சஃபோல்க் என்கிற நகரில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தனது பற்களை தனது கைகளால் பிடிங்கி உள்ளார். மேலும் இந்த பிடுங்கிய பற்களை கையில் பிடித்திருக்கும் படத்தைப் தனது சமூக ஊடகங் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்களை குழப்பத்தில் உள்ளாக்கியதோடு, வைரலாகவும் செய்தது. மேலும் அதிக தலைப்புச் செய்திகளையும் இது உருவாக்கி வருகிறது. இந்த பெண்மணி நாள்பட்ட ஈறு நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் இதற்காக இவர் உள்ளூர் பல் மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினார், ஆனால் இவரது அருகிலுள்ள இடத்தில் உள்ளூர் பல் மருத்துவர் யாரும் இல்லை.
அத்துடன் இந்த பெண் இவரது பட்ஜெட்டில் எந்த பல் மருத்துவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அதிக வலி காரணமாக தனது பற்களை கைகளால் பிடுங்க முடிவு செய்தார். இந்நிலையில் தன்னுடைய பதின்மூன்று பற்கள் இந்த பாதிப்பினால் ஏற்கனவே வெளியே நீட்டி கொண்டு இருப்பதால், மற்றவர்கள் முன் சிரிப்பதற்கு கூட முடியாமல் அவஸ்தைப்பட்டார்.

பற்கள் பிடுங்கிய பெண்
இவருக்கு அருகில் எந்த பல் மருத்துவமனையும் இல்லாததால் தனது பல்லை தானே பிடுங்குவது என்கிற முடிவை எடுத்ததாக டேனியல் கூறினார். இவரது வீட்டிற்கு அருகில் இருந்த உள்ளூர் பல் மருத்துவமனை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது விட்டதாம். எனவே அந்த ஊர்வாசிகள் எந்த வகையான பல் பிரச்சினையாக இருந்தாலும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்கிற சூழல் தான் இருந்தது. மேலும் அங்கு இருந்த கிளினிக்குகளும் மிகவும் விலை உயர்ந்தவையார் உள்ளன. இந்த சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டும், பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த டேனியல் தனது பாதிக்கப்பட்ட பற்கள் அனைத்தையும் பிடுங்கி விட்டார்.

டேனியல்
இவரது பல்லிற்கு மோசமான பாதிப்பு வர காரணம், டேனியலுக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்பட கூடிய பிரச்சனை இருந்து வந்தது. பின்னர் அது தொற்றுநோயாக மாறியது. இப்போது, அவருடைய ஈறுகள் மிகவும் மோசமாகிவிட்டன, மேலும் சில பற்கள் அதிக வலியை தர கூடியதாக மாறி விட்டன. எனவே தான் பதின்மூன்று பற்களையும் பிடுங்கி விட்டார். இதன் பிறகும், இன்னும் ஒன்பது பற்கள் விழாமல் அசைந்து கொண்டே இருக்கின்றன. மேலும் தினசரி வேலைக்குச் செல்வதற்காக தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு டேனியல் தள்ளப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.