• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Kim Jong Un : கிம் ஜாங் ஏன் உடல் எடையை குறைத்தார்..? உலக நாடுகள் ஆர்வம் காட்ட காரணம் என்ன?

Kim Jong Un : கிம் ஜாங் ஏன் உடல் எடையை குறைத்தார்..? உலக நாடுகள் ஆர்வம் காட்ட காரணம் என்ன?

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

37 வயதான அவர், சுமார் 140 கிலோ எடையுடன் இருந்தார். 4 மாதங்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய அவர், ஒல்லியாக இருப்பது பலருக்கும் வியப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

  • Share this:
இதய நோய் ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எடையை குறைத்திருப்பதாக கொரிய ஆய்வாளர் ஹாங் கூறியுள்ளார்.

டெக்னாலஜி உட்சபட்ச வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்தக் காலத்திலும் ஒரு மர்ம பிரதேசமாகவே வட கொரியா இருந்து வருகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம், ஆட்சிக் கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய எந்த தகவலும் அவ்வளவு எளிதாக வெளியுலகுக்கு தெரிந்துவிடாது. அந்த நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் தலைமையிலான ராணுவ ஆட்சியின் கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், அந்த நாட்டைப் பற்றிய பல்வேறு யூகங்களும், வதந்திகளும் நாள்தோறும் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கும். அந்தவகையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலைப் பற்றிய தகவல்கள் அண்மைக் காலமாக உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

அந்த நாட்டின் மிக முக்கிய விழாவாக கருதப்படும் வட கொரியா ஆண்டு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு விழாக்களிலும் கிம் ஜாங் உன் உடல்நிலைப் பற்றிய செய்திகள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கின. அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டது. கிம் ஜாங் உன் முழுமையாக செயல்பட முடியாததால் அவருடைய சகோதரிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் நாட்டின் சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த அதிபராக அவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் உலக நாடுகளிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள உலகில் இருக்கும் முன்னணி உளவு அமைப்புகளும் களத்தில் குதித்தன. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா நாடுகள் வட கொரியா மற்றும் அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. ஏனென்றால், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வட கொரியா, அமெரிக்காவுக்கும், அதன் நேச நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுற்றுத்தலாக உள்ளது.

இந்த நிலையில், அண்மையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன் ஒல்லியாக காட்சியளித்தார். 37 வயதான அவர், சுமார் 140 கிலோ எடையுடன் இருந்தார். 4 மாதங்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றிய அவர், ஒல்லியாக இருப்பது பலருக்கும் வியப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அவர் ஏன் உடல் எடையை குறைத்தார்? உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என்ற கோணத்தில் மீண்டும் யூகங்கள் கிளம்பின.

Florida Building Collapse | அமெரிக்காவின் மியாமி நகரில் 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு...

இது குறித்து விளக்கமளித்துள்ள தென் கொரிய ஆய்வாளர் ஹாங், கிம் ஜாங் உன் உடல் எடையை குறைத்திருப்பதை அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்பால் என கருதக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதனால் கூட உடல் எடையைக் குறைத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அவருடைய அப்பா மற்றும் தாத்தா ஆகியோர் இதய நோய் பிரச்சனையால் உயிரிழந்ததால், தனக்கும் அந்த நோய் ஆபத்து ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் பருமனான உடல் எடையை அவர் குறைத்திருக்கலாம் என ஹாங் விளக்கமளித்துள்ளார். கிம் ஜாங் உன் அதீத குடிப்பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: