தாத்தா உடன் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயணம்... கமலா ஹரிஸ்க்கு திருப்புமுனையாக அமைந்த தருணம்

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தாத்தா உடன் நடைபயிற்சி மேற்கொண்டதையும் கமலா நினைவுகூர்ந்துள்ளார்.

தாத்தா உடன் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயணம்... கமலா ஹரிஸ்க்கு திருப்புமுனையாக அமைந்த தருணம்
சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தாத்தா உடன் நடைபயிற்சி மேற்கொண்டதையும் கமலா நினைவுகூர்ந்துள்ளார்.
  • Share this:
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரீஸ், நம்ம ஊருக்கார பொண்ணு என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னைக்கும் - கமலா ஹாரீஸிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கமலா ஹாரீஸ் CNN-க்கு அளித்த பேட்டியில் சென்னைக்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். தன்னுடைய தாய் தனக்கும், தனது சகோதரி மாயாவிற்கும் இந்திய பண்பாடு குறித்து கற்று கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா செல்லும் போதும் தன் வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் தாய் மற்றும் தனது தாத்தா பி.வி.கோபாலன் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்தியாவில் உள்ள கமலா ஹாரீஸின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சுதந்திர போராட்ட தியாகியாக இருந்த தனது தாத்தா பி.வி.கோபாலான், பின்னர் மாநில அளவிலான செயலாளர் பதவிகளில் இருந்துள்ளதாகவும் கமலா ஹாரீஸ் தனது பேட்டிகளில் பகிர்ந்துகொண்டுள்ளார். தாத்தாவின் ஓய்விற்குப் பிறகு சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் அவருடன் நடைபயிற்சி மேற்கொண்டதையும் கமலா பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார்.

கடற்கரை நடைபயிற்சியில் தனது சகாக்களுடன் தாத்தா, ஊழலை தடுப்பது குறித்தும் அரசியல் குறித்தும் நடத்திய உரையாடல்கள் தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் கமலா, அவை தன்னை நேர்மையான, பொறுப்புள்ள பெண்ணாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி MINDY சொக்கலிங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமலா ஹாரீஸ் தோசை சுடும் வீடியோ தற்போது வேகமாக பரவிவருகிறது. அப்போதும் கூட, சென்னை உடனான தனது நினைவலைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

மேலும், உலகிலேயே இந்தியா தான் மிகவும் பழமையான ஜனநாயகத்தை கொண்டுள்ளதாகவும், அதுவே தன்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ள கமலா, தனது தாத்தா, பாட்டி மனித உரிமை மீது நம்பிக்கை கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading