Home /News /international /

இன்று சர்வதேச மலாலா தினம் - இந்நாளின் வரலாறு தெரியுமா..?

இன்று சர்வதேச மலாலா தினம் - இந்நாளின் வரலாறு தெரியுமா..?

சர்வதேச மலாலா தினம்

சர்வதேச மலாலா தினம்

International Malala Day | டிசம்பர் 2014ல், மலாலா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார், மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

  ‘மலாலா’ பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த பெயரை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. உலகெங்கிலும் உள்ள பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடி வருபவர் மலாலா யூசுப்சாய். ஸ்வாட் பள்ளத்தாக்கில் பிறந்த மலாலா, பாகிஸ்தானில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தலிபான்கள் தடை செய்ததால், பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், அவர் வீட்டில் இருக்க மறுத்து, தலிபான்களின் தடையை மீறி பள்ளிக்கு சென்றார். இதற்காக மலாலாவிற்கு துப்பாக்கி குண்டுகளை பயங்கரவாதிகள் பரிசளித்தனர்.

  ஆம், 2012ம் ஆண்டு, பெண் குழந்தைகளின் கல்விக்காக பிரச்சாரம் செய்ததற்காக மலாலா தலிபான்களால் தலையில் சுடப்பட்டார். "அக்டோபர் 2012ல், பாகிஸ்தான் தலிபான் உறுப்பினர் எனது பள்ளி பேருந்தில் ஏறி, எனது தலையின் இடது ஓரமாக சுட்டார். தோட்டா எனது இடது கண், மண்டை ஓடு மற்றும் மூளையை சிதைத்தது - என் முக நரம்பு, என் செவிப்பறையை உடைத்து, என் தாடை மூட்டுகளை உடைத்தது" என தனது பழைய பதிவு ஒன்றில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை மலாலா விளக்கியுள்ளார்.

  பின்னர் அதிலிருந்து குணமடைந்த மலாலா , தனது தந்தையுடன் சேர்ந்து அறக்கட்டளையை நிறுவினர், இது பெண்களின் கல்விக்கு ஆதரவு திரட்டும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மலாலாவின் இந்த அமைப்பு, Vital Voices Global Partnership உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  மலாலா தினம் கொண்டாடடப்படுவது ஏன்?

  டிசம்பர் 2014ல், மலாலா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார், மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2017ல் ஐக்கிய நாடுகளின் அமைதி தூதராக நியமிக்கப்பட்டார். இளம் ஆர்வலர் தனது தைரியத்திற்காக 40க்கும் மேற்பட்ட விருதுகளையும், கெளரவிப்புகளையும் பெற்றுள்ளார்.

  Also Read : உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழி இதோ! GBOMBS டயட்

  2013ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என குறிப்பிட்டுள்ளது. தலிபான்களால் சுடப்பட்டு, பல கட்ட சிகிச்சைக்கு பிறகு மீண்ட மலாலா, முதல் முறையாக பேசியது இதுவே ஆகும்.

  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா:

  மலாலா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார். அவரது முறையான கல்வி 2020ல் நிறைவடைந்தது. அவர் 2021ல் பாகிஸ்தானின் கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் மேலாளரான அசர் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இன்றும் உலகளவில் 130 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போராடி வருகின்றனர். எனவே அவர்களுக்காக மலாலா தொடர்ந்து போராடி வருகிறார். எல்லா பெண்களும் கல்வி கற்றவும், அறிவை வளர்க்கவும், வழிநடத்தவும் கூடிய ஒரு உலகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மலாலா தொடர்ந்து போராடி வருகிறார்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Malala Yousafzai

  அடுத்த செய்தி