முகப்பு /செய்தி /உலகம் / சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்

பெண் குழந்தை

பெண் குழந்தை

ஐக்கிய நாடுகள், தனது அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில், பெண் குழந்தைகள், சிறுமிகள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுமே விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண் குழந்தை பிறந்தாலே செலவு, பெண் குழந்தை ஒரு சுமை, பெண்சிசுக் கொலை என்ற நிலை எல்லாம் மாறி, பெண்கள் சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சக்தி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த துறைகளில் கூட பெண்கள் காலடி வைத்து மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஆணிவேராக பெண் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி மற்றும் அவர்கள் உரிமைகளை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினம் முதன்முறையாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள், தனது அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில், பெண் குழந்தைகள், சிறுமிகள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுமே விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு உலகளாவிய அளவில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சோதனைகளும் சவால்களும் அவர்களுக்கான வாய்ப்புகளை பற்றி பெரிய அளவில் பேச வேண்டும் என்பதைப் பற்றி பறைசாற்றி வந்துள்ளது.

சர்வதேச பெண் குழந்தைகளின் வரலாறு அவற்றின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே

2022 ஆம் ஆண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்துக்கான கருப்பொருள் – “இது நம்முடைய காலம் – நமக்கான உரிமைகள் மற்றும் நம் எதிர்காலம்”

பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மீது கவனம் செலுத்துவது தான் இந்த ஆண்டின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உரிமைகள் என்பதைக் கடந்து, பெண் குழந்தைகள் எவ்வாறு உடல் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், மன நலம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது. அடிப்படைக் கல்வியைத் தாண்டி, உலகம் முழுவதும் பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பேசப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

Also Read : பெண் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய 6 விஷயங்கள்..!

சர்வதேச பெண் குழந்தைகள் தின வரலாறு:

பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று 1995 ஆம் ஆண்டு, வரலாற்றில் முதல் முறையாக பீஜிங் டிக்ளரேஷன் மற்றும் பிளாட்ஃபாரம் ஃபார் ஆக்ஷன் முன்னிறுத்தியது.

2011 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடு பொது சபை, அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்துள்ளது. பெண் குழந்தைகளை மதிக்கும், போற்றும், அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த காலத்தில், பெண் குழந்தைகள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அடிப்படையில் தீம் அறிவிக்கப்படுகிறது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்துக்கான முக்கியத்துவம்:

ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் உரிமைகளுக்கு ஒரு குரல் தேவை; அவர்களுக்கு வாழ்வில் அடிப்படை மாற்றங்கள் தேவை என்பதை உலகத்திற்கு அறிவிக்க வேண்டும். அதனால் தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மாற்றத்திற்கான ஒரு வழியாகவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணவும் உதவும். அது மட்டும் இல்லாமல் பாலியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் ஆண் பெண் பாகுபாடு குடும்பம் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளை எளிதாக எதிர்கொண்டு, தங்களின் வளர்ச்சி மட்டுமல்லாமல் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும்.

Also Read : பெண் குழந்தைகளின் நம்பிக்கை ஊக்குவிக்க நாம் கேட்க வேண்டிய கேள்விகள்...

top videos

    இந்த மாற்றம் என்பது தனிநபரால் கொண்டு வர முடியாது. எனவே சமூகமாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதற்கான மாற்றத்தை அனைவரும் கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொது மக்களை தாங்கள் பார்த்த, கேட்ட சுவாரஸ்யமான பெண் குழந்தைகள் மாற்றத்திற்கு முக்கியமான காரணியாக இருப்பவர்கள் பற்றிய கதைகள், வீடியோக்கள் ஆகியவற்றை பற்றி பகிரும் படி கோரியிருக்கிறது.

    First published:

    Tags: Girl Child, National girl child day, Woman