Home /News /international /

இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்வது ஏன்?

இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்வது ஏன்?

Why Indian Students Go To Ukraine |  உக்ரைனில் கல்வி பயிலும் வெளிநாட்டவரில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 22 புள்ளி 9 சதவீதம் பேர் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Why Indian Students Go To Ukraine | உக்ரைனில் கல்வி பயிலும் வெளிநாட்டவரில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 22 புள்ளி 9 சதவீதம் பேர் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Why Indian Students Go To Ukraine | உக்ரைனில் கல்வி பயிலும் வெளிநாட்டவரில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 22 புள்ளி 9 சதவீதம் பேர் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    உக்ரைனுக்கு செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கவே செல்கின்றனர். இதற்கான காரணங்கள் என்ன என்பதை தற்போது காணலாம்...

    ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவப் படிப்பை படித்து வருகின்றனர். உக்ரைனை இந்திய மாணவர்கள் தேர்வுசெய்வதற்கு கல்விக்கட்டணமே முக்கிய காரணமாக திகழ்கிறது.

    இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும் நிலையில், உக்ரைனில் 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தாலே போதுமானது என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி குறிப்பிடுகிறார்.

    உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்கள்.. ரஷ்ய படையினரால் சுட்டுக் கொலை!

    உக்ரைனில் பெறும் மருத்துவப் பட்டத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்கிறது. அதோடு, உலக மருத்துவக் கவுன்சிலும் அங்கீகரிக்கிறது.

    இந்தியாவில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே இடம் கிடைக்கிறது. உக்ரைனில் படிப்பதற்கு மேல்நிலைப் படிப்பே போதுமானதாக உள்ளது.

    உக்ரைனில் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் உலகத்தரமான கல்வியும், செய்முறை பயிற்சியும் கிடைப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆங்கிலம், உக்ரேனியன், ரஷ்யன் ஆகிய மொழிகளை தேர்வுசெய்துகொள்ளலாம்.

    கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்தில் 50 சதவீத சலுகையை அந்நாட்டு அரசு அளிக்கிறது.

    உக்ரைனில் கல்வி பயிலும் வெளிநாட்டவரில் இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 22 புள்ளி 9 சதவீதம் பேர் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    சோவியத் ஒன்றியத்தின் இருப்பு முடிவுக்கு வந்தது எப்படி?

    அதேநேரம், எந்தவொரு வெளிநாட்டிலும் கல்வி கற்பதற்கு செல்வதற்கு முன்னதாக, அதனால் கிடைக்கும் பலன்கள் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்ந்த பிறகே முடிவுசெய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    உக்ரைனில் மருத்துவப்படிப்பை முடிப்பவர்கள், இந்தியாவில் பயிற்சியை தொடர்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி