அமேசானில் காட்டுத்தீயை அணைக்க கேட்காமலேயே நிதி அளிக்க முன்வந்திருப்பதின் நோக்கம்?... பிரேசில் அதிபர்

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசானின் அழிவு உலகத்தின் அழிவு என்பதை கருத்தில் கொண்டு உலக நாடுகள் விரைந்து செயல்பட்டால் மட்டுமே அமேசான் காடுகளையும், மனித குலத்தையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

news18
Updated: August 28, 2019, 7:27 AM IST

அமேசான் காடுகளில் எரிந்துவரும் தீயை அணைக்க கேட்காமலேயே நிதி அளிக்க முன்வந்திருக்கும் ஜி7 நாடுகளின் நோக்கம் என்ன என பிரேசில் அதிபர் போல்சோனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவடார், பொலிவியா, கயானா, சுரிநாம், ஃப்ரெஞ்ச் கயான என 9 நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் அமேசான் காடுகள் இன்னும் முழுமையாக அறியப்படாத பொக்கிஷமாகவே இருந்து கொண்டிருக்கின்றன. பூமியில் வசிக்கும் உயிரினங்களில் 30 சதவிகித உயிரினங்கள் அமேசான் காடுகளில் வசிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. 430 பாலூட்டி இனங்கள், 40 ஆயிரம் தாவர இனங்கள், 25 லட்சத்திற்கும் அதிகமான பூச்சி இனங்கள் என பல்லுயிர் மண்டலமாகப் பரவி இருக்கிறது அமேசான் காடு. ஒவ்வொரு ஆண்டும் அங்கிருந்து புதிய புதிய உயிரினங்களும், தாவர இனங்களும் கண்டறியப்பட்டு வருகின்றன. தாவரங்கள், விலங்குகள் மட்டும் அல்லாமல் கிட்டத்தட்ட 3 கோடி மக்களின் இருப்பிடமாகவும் அமேசான் காடுகள் இருந்து வருகின்றன. அத்தகைய அமேசான் காடுகளில் சமீபத்தில் அதிக அளவிலான தீவிபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அமேசான் காடுகளில் பரவி வரும் தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த, ஜி7 நாடுகள் இணைந்து ரூ. 160 கோடி நிதி அளிக்க முன்வந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் போல்சோனர், யாரும் உதவி கேட்காத நிலையில், ஐரோப்பிய நாடுகள் உதவி செய்ய ஏன் முன்வரவேண்டும் என வினவியுள்ளார். இந்த உதவிக்கான நோக்கம் என்ன எனவும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அமேசான் காட்டுப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் கால் ஊன்ற துடிப்பதாகவும் போல்சோனரோ குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானால், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான நோட்டர் டாம் ஆலயத்தை கூட காப்பாற்ற முடியவில்லை என பிரேசில் நாட்டு ராணுவ தளபதி ஓனிக்ஸ் லோரென்சோனி கூறியுள்ளார். ஜி7 நாடுகள் அறிவித்துள்ள நிதி போதாது என கிரின் பீஸ் அமைப்பு குறை கூறியுள்ளது.

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசானின் அழிவு உலகத்தின் அழிவு என்பதை கருத்தில் கொண்டு உலக நாடுகள் விரைந்து செயல்பட்டால் மட்டுமே அமேசான் காடுகளையும், மனித குலத்தையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

Also watch

Loading...

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...