Home /News /international /

சோவியத் ஒன்றியத்தின் இருப்பு முடிவுக்கு வந்தது எப்படி?

சோவியத் ஒன்றியத்தின் இருப்பு முடிவுக்கு வந்தது எப்படி?

சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஸ்டாலினின் ஐந்து ஆண்டு திட்டம், நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யாமல், மூலதன பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தியது.

சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஸ்டாலினின் ஐந்து ஆண்டு திட்டம், நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யாமல், மூலதன பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தியது.

சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஸ்டாலினின் ஐந்து ஆண்டு திட்டம், நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யாமல், மூலதன பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தியது.

   73 ஆண்டுகளாக உலக அரசியலில் தீர்மான சக்தியாக இருந்த சோவியத் ஒன்றியத்தின் இருப்பு முடிவுக்கு வந்தது எப்படி? என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

  மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் 1991 - ஆம் ஆண்டு டிசம்பர் 25, தேதி தான் சோவியத் கொடி கடைசியாகப் பறந்தது. சோவியத் குடியரசுகளின் உக்ரைன், ஜார்ஜியா, பெலாரஸ், ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் பிரதிநிதிகள் தாங்கள் இனி சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தன. அதற்கு முன்னதாக லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா நாடுகள் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து பிரிந்து சுதந்திரத்தை அறிவித்திருந்தன.

  1985- ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அதிபராக பதவியேற்ற கார்பச்சேவ் இரண்டு கொள்கைகளை முன்மொழிந்தார். ஒன்று கிளாஸ்னோஸ்ட் திட்டம், இது அரசியல் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து. ஸ்டாலினின் ரகசிய போலீஸ் அடக்குமுறையை தகர்த்தெறித்தது. அரசை விமர்சிக்க செய்தித்தாள்களை அனுமதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் தேர்தலில் பங்கேற்க அனுமதித்தது.

  இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தை துவம்சம் செய்யத் தொடங்கிய ரஷ்யா... நவீன ஏவுகனைகள் மூலம் அதிரடி தாக்குதல்

  மற்றொன்று பெரெஸ்ட்ரோயிகா என்பது. இது கலப்பு கம்யூனிச-முதலாளித்துவ அமைப்பை நோக்கிய பொருளாதார மறுசீரமைப்புக்கான திட்டமாகும். இதன் மூலம் மக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இரும்புக் கரத்தால் ஆளப்பட்டு பழக்கப்பட்ட மக்கள் இதனை அரசின் பலவீனமாக பார்த்தனர்.

  இது மட்டுமல்லாமல், சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபனர்கள், லெனினின் கொள்கையிலிருந்து விலகி செல்ல தொடங்கினர். பொலிட் பீரோ உறுப்பினர்களின் சொத்துக்கள் பல மடங்கு அதிகரித்தன . அடித்தட்டு மக்கள் பட்டினியால் இறக்க, பொலிட் பீரோ உறுப்பினர்களோ, அனைத்து வசதிகளுடன் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தனர். இதனால் மக்கள் அதிருப்தி அடைந்து, பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.

  1981-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற ரெனால்ட் ரீகன், அந்நாட்டின் ரரணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை பன்மடங்கு அதிகரித்தார். ஏற்கெனவே பொருளாதார சுணக்கத்தை எதிர்கொண்டு வந்த சோவியத் ஒன்றியத்தை மேற்கத்திய நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். கச்சா எண்ணெய் விலையை குறைக்க பல திட்டங்களை வகுத்தார். எண்ணெய் ஏற்றுமதியை நம்பியிருந்த சோவியத் ஒன்றியம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

  உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்கள்.. ரஷ்ய படையினரால் சுட்டுக் கொலை!

  சோவியத் ஒன்றியத்தின் தலைவராக இருந்த ஸ்டாலினின் ஐந்து ஆண்டு திட்டம், நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யாமல், மூலதன பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தியது. பல ஆண்டுகளுக்கு பின்னரும் கம்யூனிச ஆட்சி, இதிலிருந்து விலகாமல் மூலதன பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து வந்தது. இந்த கொள்கை மக்கள் புரட்சி வெடிக்க காரணமாக அமைந்தது.

  சோவியத் ஒன்றியம் சிதறுண்டதற்கு அதன் கட்டமைப்பே ஒரு காரணியாக இருந்தது. 15 முற்றிலும் வேறுபட்ட குடியரசுகளை ஒன்றாக இணைத்திருந்த ஒரு நாடு. நாடு முழுவதும் பல்வேறு இனங்கள். மொழி, கலாசாரம் கொண்ட மக்கள் வாழ்ந்தனர். பழங்குடியின சிறுபான்மை மக்களை, ரஷ்ய மொழி பேசும் மக்கள் ஒடுக்க நினைத்தனர். இது மக்களிடைய பெரும் மோதல்கள் வெடிக்க காரணமாக இருந்தது.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Russia, Russia - Ukraine

  அடுத்த செய்தி