• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம்.. சீனாவில் இது தான் இப்ப ட்ரெண்டிங்! - எதுக்குனு தெரியுமா?

குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தம்.. சீனாவில் இது தான் இப்ப ட்ரெண்டிங்! - எதுக்குனு தெரியுமா?

chicken parenting

chicken parenting

கோழி ரத்த ஸ்டீராய்டுகள் செலுத்தப்படுவதால் குழந்தைகளிடையே ஹைபராக்டிவிட்டி அதிகரிக்கிறது. இது குழந்தைகளை கல்வியிலும், விளையாட்டுகளிலும் சிறப்பாகச் செயல்பட உதவும்.

  • Share this:
குழந்தைகள் வளர்ப்பில் அக்கறை கொண்டிருக்கும் சீனர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி ரத்தத்தை செலுத்துகின்றனர். இந்த முறை தற்போது சீனாவில் பிரபலமடைந்து வருகிறது.

குழந்தைகளை வளர்ப்பதிலும், அவர்களின் எதிர்காலத்துக்காக மெனக்கெடும் பெற்றோர்கள் அவர்களுக்கு பக்குவமாக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்வார்கள். அவர்களின் கல்வி, உடல் ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுவார்கள்.

அந்த வகையில் சீன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மேல் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறை, குழந்தை வளர்ப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளது. அப்படி என்ன செய்துவிட்டார்கள் என கேட்டால், அவர்கள் செய்துகொண்டிருக்கும் செயல் நம் பெற்றோர்களை அதிர்வைப்பதாக இருக்கும்.

சீனாவின் ‘சிக்கன் பேரண்டிங்’ என்ற முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது.

சிக்கன் பேரண்டிங் என்றால் என்ன?

கோழி ரத்தத்தை குழந்தைகளுக்கு ஊசி மூலம் செலுத்துவதே சிக்கன் பேரண்டிங் ஆகும். அதாவது இப்படி கோழி ரத்தத்தை குழந்தைகளுக்கு செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும் எனவும் புற்றுநோய், வழுக்கை, குழந்தையின்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என கூறுகின்றனர்.

இந்த கோழி ரத்த ஸ்டீராய்டுகள் செலுத்தப்படுவதால் குழந்தைகளிடையே ஹைபராக்டிவிட்டி அதிகரிக்கிறது. இது குழந்தைகளை கல்வியிலும், விளையாட்டுகளிலும் சிறப்பாகச் செயல்பட உதவும்.

குழந்தைகளை சூப்பர் குழந்தைகளாக மாற்ற இந்த முறையை சீனர்கள் கையாளுவதாகவும், இந்த முறை தற்போது பீஜிங், ஷாங்காய், குவான்சோ நகரங்களில் அதிகமாக பிரபலமடைந்துவருவதாக சிங்கப்பூர் போஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் சிக்கன் பேரண்டிங், அமெரிக்காவில் பிரபலமாக விளங்கும் ஹெலிகாப்டர் பேரண்டிங் முறைக்கு ஒப்பாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  மினி ஷார்ட்ஸ் அணிந்து நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு!

சீனர்களிடையே சிக்கன் பேரண்டிங் பிரபலமடைந்து வரும் அதே நேரத்தில் பெரும்பாலான சீன குழந்தைகள், மாணவர்கள் மன அழுத்தத்தில் தவிப்பதாக சூப் சீனா என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: