முகப்பு /செய்தி /உலகம் / இந்தியாவுக்கு திரும்பி போங்கள், ஐரோப்பாவுக்கு நீங்கள் தேவையில்லை.. இந்தியர் மீது மீண்டும் இனவெறி தாக்குதல்

இந்தியாவுக்கு திரும்பி போங்கள், ஐரோப்பாவுக்கு நீங்கள் தேவையில்லை.. இந்தியர் மீது மீண்டும் இனவெறி தாக்குதல்

போலாந்தில் இந்தியர்கள் மீது இன வெறி தாக்குதல்

போலாந்தில் இந்தியர்கள் மீது இன வெறி தாக்குதல்

இந்தியரோ வெள்ளைக் கார நபரின் பேச்சுக்கு எந்த வித சலனமும் இல்லாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு நடந்து சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaWarsawWarsawWarsawWarsaw

போலாந்து நாட்டில் இந்தியர் ஒருவரை வெள்ளை இனத்தவர் நிற வெறியுடன் திட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் போலாந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் நடைபெற்றுள்ளது.இந்திய நபர் வார்சா சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை வெள்ளை இன நபர் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். இதை கவனித்த இந்தியர் ஏன் என்னை வீடியோ எடுக்கின்றீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளிக்காமல் அந்த வெள்ளைக்கார நபர், "நீங்கள் ஏன் போலாந்தில் இருக்கின்றீர்கள், அமெரிக்காவிலும் நீங்கள் தான் அதிகமாக இருக்கின்றீர்கள், போலாந்து நாட்டை படையெடுக்க நீங்கள் நினைக்கின்றீர்களா,நீங்கள் ஏன் உங்கள் சொந்த நாடான இந்தியாவுக்கு செல்லக்கூடாது. எந்த உரிமையில் நீங்கள் ஐரோப்பாவை படையெடுக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இந்தியா இருக்கும் போது வெள்ளை காரர்கள் நாட்டிற்கு ஏன் வருகிறீர்கள்.

நீங்கள் ஒட்டுண்ணிகளாக இருந்து எங்கள் இனத்தை அழிக்கின்றீர்கள். ஐரோப்பாவுக்கு நீங்கள் தேவையில்லை" என இன ரீதியாக தொடர்ச்சியாக திட்டி கருத்து தெரிவித்தார்.

ஆனால், இந்தியரோ வெள்ளைக் கார நபரின் பேச்சுக்கு எந்த வித சலனமும் இல்லாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு நடந்து சென்றுள்ளார். இந்த காணொளி இணையத்தில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: அர்ஜென்டினா துணை அதிபர் நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்.. பரபரப்பு காட்சிகள்!

சில நாள்களுக்கு முன்னர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய பெண்கள் பார்த்து அந்நாட்டில் வசிக்கும் வெள்ளை இன பெண் இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என மிரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தொடர்ந்து இந்தியர்கள் மீது இது போன்ற இன வெறி தாக்குதல் தொடர்ந்து அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

First published:

Tags: Poland, Video gets viral