டெக்சாமிதோசோன் மருந்தை யாருக்கு அளிக்கலாம்? WHO நிர்வாக இயக்குநர் விளக்கம்!
Dexamethasone மருந்தை லேசான கொரோனா அறிகுறி உள்ளோருக்கு தரவேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல்
- News18 Tamil
- Last Updated: June 23, 2020, 12:53 PM IST
தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு மட்டுமே அந்த மருந்தை மருத்துவர்கள் கண்காணிப்பில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். லேசான அறிகுறி உள்ளோருக்கு இந்த மருந்து பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், லேசான அறிகுறி உள்ளோருக்கு இந்த மருந்தை அளிக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Also read... இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் சாப்பிடுவதும், குடிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல - உலக சுகாதார அமைப்பு
உலகளவில் 88,00,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 4,65,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெட்ராஸ் கூறியுள்ளார். ஒரே நாளில் 1,83,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.