WHO TEAM VISITS WUHAN MARKET WHERE COVID 19 FIRST DETECTED SKV
வுகான் நகரில் உலக சுகாதார மைய நிபுணர்கள் ஆய்வு... உயிரினங்கள் விற்பனை சந்தையை நேரில் பார்வை
வுகான் நகரில் நிபுணர்கள் ஆய்வு
வுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் செல்ல நிபுணர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அங்குதான் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என ஆய்வு செய்ய சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு அங்குள்ள உணவு சந்தையை நேரில் பார்வையிட்டது.
சீனாவிற்கு சென்றுள்ள உலக சுகாதார நிபுணர்கள் கடந்த 29-ம் தேதி முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வுகானில் உள்ள மிகப்பெரிய உணவுச் சந்தையை ஆய்வு செய்தனர். அங்கு உயிரினங்கள் உயிருடன் விற்கப்படுவதை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள், பைஷாசூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
வுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் செல்ல நிபுணர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அங்குதான் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.