கொரோனா எங்கிருந்து உருவானது என்பதைக் கண்டறிய எல்லா முயற்சியும் செய்வோம் - உலக சுகாதார நிறுவனம்
கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டறிய எல்லாவற்றையும் செய்வோம் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

டெட்ரோஸ்
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 3:01 PM IST
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி உலகை சிதைத்துவருகிறது. உலகின் எந்த நாடுகளும் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. இதுவரையில், உலக அளவில் 6,36,41,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக 14,74,984 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 1.39 கோடி பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,74,332 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்திலுள்ள இந்தியாவில் 94,63,254 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1,37,659 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலகில் அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் உள்ளன. இருப்பினும், இப்போது கொரோனா வைரஸ் எதன் மூலம் பரவத் தொடங்கியது என்பது கண்டறியப்படாமல் இருந்துவருகிறது. சீனாவில் இறைச்சி மார்க்கெட்டிலிருந்து கொரோனா பரவியது என்று நம்பப்பட்டுவந்த நிலையில், அதனை சீனா மறுத்துவருகிறது. சீனாவில் கொரோனா பரவுவதற்கு முன்னரே வேறு நாடுகளில் கொரோனா பரவியுள்ளது என்று விளக்கமளித்துவருகிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சித்துவருகிறார். இந்தநிலையில், கொரோனா பரவல் தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ‘கொரோனா வைரஸ் எந்த விலங்கு மூலம் பரவத் தொடங்கியது என்பதைக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் செய்யும். வரும் தலைமுறைகளை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அந்த விவரத்தை தெரிந்துகொள்வது முக்கியம். இந்த மர்மத்தின் வேரிலிருந்து தெரிந்துகொள்ள உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது. சீனா இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு ரொம்பவும் தெளிவானது. அந்த வைரஸின் தொடக்கத்தைக் கண்டறிய வேண்டும். அது எதிர்கால தலைமுறையை பாதுகாக்க உதவும்’ என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்