ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு... சீனாவின் நிலை குறித்து கவலை தெரிவித்த WHO தலைவர்

கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு... சீனாவின் நிலை குறித்து கவலை தெரிவித்த WHO தலைவர்

கொரோனா

கொரோனா

தடுப்பூசி செலுத்தும் வேகத்தை சீனா அரசு துரிதப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaGenevaGenevaGeneva

இரண்டு ஆண்டுகளை கடந்த பின்னரும் சீனாவும், கொரோனாவும் மீண்டும் தலைப்பு செய்திகளாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளன. இந்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. இரண்டு ஆண்டுகளில், முககவசம், தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

அங்கு, உருவமாறிய BF.7 என்ற கொரோனா பரவுவதாக பெருந்தொற்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மருத்துவ அறிக்கைகளின்படி, BF.7 மாறுபாடு பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை BF.7 மாறுபாடு தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகின்றன. அங்குள்ள மயானங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில், சீனாவின் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சீனாவின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிகினி பெண்கள்தான் குறி.. தொடர் கொலைகள்.. விடுதலையாகும் ரியல் ’ராட்சசன்’ சீரியல் கில்லர்!

கோவிட் பரவல் குறித்து அவர் கூறுகையில், "உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து கொண்ட வந்தாலும், சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சீனாவின் நிலைமை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அந்நாட்டிடம் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களையும் ஆய்வு தகவல்களையும் தருமாறு கேட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை சீனா அரசு துரிதப்படுத்த வேண்டும்.

தடுப்பூசியில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது" என அவர் கூறியுள்ளார். சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டில் முறையான தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாத பட்சத்தில் தோராயமாக 10 லட்சம் பேர் கொரோனாவில் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளது.

First published:

Tags: China, Corona, Corona Vaccine, Covid-19, WHO