Home /News /international /

கொரோனா வைரஸ்களில் இதுவரை கண்டிராத வேகத்தில் ஒமைக்ரான் பரவி வருகிறது - WHO

கொரோனா வைரஸ்களில் இதுவரை கண்டிராத வேகத்தில் ஒமைக்ரான் பரவி வருகிறது - WHO

ஒமைக்ரான் வைரஸ்

ஒமைக்ரான் வைரஸ்

இதுவரை 77 நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேனோம் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ்களில் இதுவரை கண்டிராத வேகத்தில், ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஒமைக்ரான் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேனோம், இதுவரை 77 நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது என்றார். உண்மையில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவியுள்ளதாகவும், ஆனால் பல நாடுகளில் அது கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளின் செயல்திறனே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் டெட்ராஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை உலகளவில் சமநிலையை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    தடுப்பூசிக்கு எதிராக உலகசுகாதார அமைப்பு செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள டெட்ராஸ், தங்கள் நோக்கம் உலக மக்களின் உயிரை காப்பது மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே அமெரிக்காவில் பேசியுள்ள அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா மாத்திரை, ஒமைக்ரான் உள்ளிட்ட அனைத்து வகையான கொரோனா வைரஸ்களுக்கும் பலன்தருகிறது என்றார்.

    Must Read : இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

    1 கோடி அமெரிக்கர்களுக்கு இந்த மாத்திரையை அளிக்க தனது அரசு பைசர் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Omicron, WHO

    அடுத்த செய்தி