சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம்- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச எமெர்ஜென்ஸியாக ஆக அறிவிக்கிறோம்.

சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம்- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: January 28, 2020, 2:42 PM IST
  • Share this:
உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் மிகவும் வலிமடைந்து வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபடேலா சாயிப் கூறுகையில், “கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச எமெர்ஜென்ஸியாக ஆக அறிவிக்கிறோம். உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சீனாவில் இந்த வைரஸின் தாக்குதல் மிகவும் கொடூரமாக உள்ளது.

இது மிகவும் அவசர கால நிலை. சீனாவுக்கும் இதர பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மக்கள் பயணம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் கடந்த 2009-ம் ஆண்டு முதன்முறையாக சீனாவில் பன்றிக் காய்ச்சல் பரவிய போதும் உலக சுகாதார நிறுவனம் மிகுந்த அபாயகரமான எச்சரிக்கையை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: வந்துவிட்டது வாட்ஸ்அப் ’டார்க் மோட்’... ஆக்டிவேட் செய்வது எப்படி..?
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading