உலகெங்கிலும் 10 பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைமையகம் கடந்த 5-ஆம் தேதியன்றி வெளியிட்ட அறிக்கையில், உலகில் உள்ள 10 பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அதன் "சிறந்த மதிப்பீடுகள்" குறிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், இது தற்போது உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை விட 20 மடங்குக்கு மேல் இருப்பதாகவும், மேலும் கடினமான கால கட்டத்தில் உலக நாடுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, பேசிய COVID-19 தொடர்பானWHO-ன் 34 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழுவின் சிறப்பு அமர்வில் டாக்டர் மைக்கேல் ரியான், " புள்ளிவிவரங்கள் நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறம் மற்றும் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் வேறுபடுகின்றன. ஆனால் இறுதியில் இதன் பொருள் “உலகின் பெரும்பான்மையானவர்கள் ஆபத்தில் உள்ளனர்” என்பதுதான்.
Also read... ஈ-சிகரெட் பயன்படுத்தும் சிறுவர்களை பெற்றோர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை.. நிபுணர்களின் அறிவுறுத்தல்கள் என்னென்ன?
இந்த கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு கணம் மௌவுனமும், அவர்களைக் காப்பாற்ற பாடுபட்ட சுகாதார ஊழியர்களை கவுரவிப்பதற்காக கைதட்டல்கள் ஆகியவை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய ரியான், இந்த தொற்றுநோயின் பரிணாமம் தொடரும் என்றும், ஆனால் நோய் பரவுவதை அடக்குவதற்கும் உயிர்களை காப்பாற்றுவதற்கும் சில வழிகள் உள்ளன எனத் தெரிவித்தார். இதனால் பல மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன, மேலும் பல உயிர்களை பாதுகாக்க முடியும் " என்றுஅவர் கூறினார்.
உலகளவில், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரை கடல் பகுதிகளில் கொரோனவால் இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் "அதிக பாசிட்டிவ்" உள்ள சூழல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனை வைத்து பார்க்கும் பொழுது, "உலகளாவிய மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதத்தினர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று எங்கள் தற்போதைய சிறந்த மதிப்பீடுகள் கூறுகின்றன என்று நிர்வாகக் குழுவை உருவாக்கி அதன் பெரும்பகுதியை வழங்கும் உறுப்பு அரசாங்கங்களின் பங்கேற்பாளர்களிடம் ரியான் கூறினார்.
இந்த மதிப்பீடு, தற்போது உள்ள உலக மக்கள் தொகையான 7.6 பில்லியன் என்ற அடிப்படையில் பார்க்கும் போது 760 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது, WHO மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டாலும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
அதாவது தற்போது கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்ட 35 மில்லியன் மக்களை விட பலமடங்கு அதிகமாக உள்ளது.
உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையானது உண்மையான எண்ணிக்கையை பெரிதும் குறைத்து மதிப்பிடுகிறது என்று நிபுணர்கள் நீண்ட காலமாக கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே, உலகம் "இப்போது ஒரு கடினமான காலகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நோய்த்தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. இது உலகின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது" என்று ரியான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.